சிறிலங்கா தொடர்பில் சர்வதேச விசாரணை முழுமைபெறவில்லை என்பதோடு, பொறுப்புக்கூறலுக்கான நீதி விசாரணை இன்னும் நடத்தப்படவில்லை : பிரதமர் வி.உருத்திரகுமாரன் கருத்து !

சிறிலங்கா தொடர்பில் சர்வதேச விசாரணை முழுமைபெறவில்லை என்பதோடு, பொறுப்புக்கூறலுக்கான நீதி விசாரணை இன்னும் நடத்தப்படவில்லை : பிரதமர் வி.உருத்திரகுமாரன் கருத்து !

சிறிலங்கா தொடர்பில் சர்வதேச விசாரணை முழுமைபெறவில்லை என்பதோடு, பொறுப்புக்கூறலின் சர்வதேச நீதிக்கான விசாரணை இன்னமும் தொடங்கப்படவே இல்லை எனவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைச்சபையில் 43வது கூட்டத் தொடர் தற்போது இடம்பெற்றிருக்கும் இவ்வேளையில், சிறிலங்கா தொடர்பில் சர்வதேச விசாரணை ஒன்று நடைபெற்றுள்ளதா என எழுந்துள்ள வாதப்பிரதிவாதங்கள் தொடர்பில் தமிழ் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், 2014ம் ஆண்டு ஐ.நா மனித உரிமைச்சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, ஆணையாளரினால் நியமிக்கப்பட்ட Mr. Martti Ahtisaari, ( former President of Finland), Ms. Silvia Cartwright, (former High Court judge of New Zealand), Ms. Asma Jahangir( former President of the Human Rights Commission of Pakistan) ஆகிய வளஅறிஞர்களினால் மேற்கொள்ளப்பட்டு 2015ம் ஆண்டில் Report of the OHCHR Investigation on Sri lanka (OISL) அறிக்கை வெளிவந்திருந்தது.

சிறிலங்காவில், அரசாங்க அதிகரிகள், இராணுவ அதிகாரிகள், மற்றவர்களை விசாரணை செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்பதோடு, யுத்தம் தொடர்பான ஆவணங்களை பார்வையிடவும் அனுமதிக்க வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

குறிப்பாக (நம்பத்தகுந்த) பாரிய அளவில் பாலியல் வன்புணர்வுகள், சித்திரவைகள் என பாரிய மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளன எனவும் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

முக்கியமாக அந்த அறிக்கையில் பாவிக்கப்பட்ட சட்டவிதிகள் reasonable grounds to believeஅடிப்படையில் நீதிமுறையிலான விசாரணைகளை போதுமானதாக காணப்படுகின்றது. ( இந்த விதிகளின் அடிப்படையில்தான் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஆணையினை பிறப்பிக்கின்றது )

குற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், judicial investigation முறையில் பொறுப்புக்கூறலுக்கான சர்வதேச நீதிவிசாரணை ஒன்றின் மூலம் குற்றங்களுக்கான பொறுப்பானவர்கள் இனங்காணப்பட்டு தண்டிக்கப்படமுடியும்.. இதனை OISL அறிக்கையின் பரிந்துரையின் 36வது சரத்தில் (under universal jurisdiction, investigate and prosecute those allegedly responsible for violations, such as torture, war crimes or crimes against humanity ) விசாரணை செய்யப்பட வேண்டும் என தெளிவாக குறிக்கப்பட்டுள்ளது.

30/1 தீர்மானத்தின் 6வது சரத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளதாவது, ( foreign judges, defence lawyers and authorized prosecutors and investigators ) வெளிநாட்டு நீதிபதிகள், சட்டவாளர்கள், வழக்கு தொடுனர்கள் மட்டுல்மல்ல விசரணையாளர்களும் ( investigators ) தேவை என தெரிவிக்கப்பட்டிருப்பதானது, நீதிமுறையிலான விசாரணையின் (judicial investigation) அவசியத்தினை அது வலியுறுத்துகின்றது.

1000க்கு மேற்பட்ட தரவுகளின் அடிப்படையில், இரகசியமான முறையில் பெறப்பட்ட சாட்சியங்கள், வாக்குமூலங்களின் அடிப்படையில் பாராதூரமான குற்றகள் இடம்பெற்றுள்ளது என்பதனை இதன் விசாரணை OISL அறிக்கையாகிய போதும் இது இது முழுமையான சர்வதேச விசாரணை ஆகிவிடாது. judicial investigation மூலமான பொறுப்புக்கூறலுக்கான சர்வதேச நீதிவிசாரணை ஒன்றின் மூலமே இது முழுமையடையும்.

சர்வதேச விசாரணை முடிந்துவிட்டதா, இல்லையா என்பது பற்றி வாதப்பிரதிவாதங்கள் செய்து கொண்டிருக்கின்ற காலம் இதுவல்ல. இந்த வாதத்துக்கான தேவை ஏன் எழுகின்றது என்பது புரியவில்லை.

ஜெனீவாவில் நமக்கான நீதி கிடைக்கும் என்று நம்பிக்கொண்டும், காத்துக் கொண்டும் இருக்கமுடியாது. ஜெனீவாவையும் ஒரு களமாக கையாள்வது போல், வேறு நீதிக்கான களங்களை நாம் திறக்க வேண்டும்.

சர்வதேச நாடுகள் தமது நலன்களின் அடிப்பமையில் ஜெனீவாவில் எடுக்கின்ற முடிவுகளுக்கும், அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கும் அமைய, எமது செயற்பாடுகளை அமைத்துவிட முடியாது. நமக்கான நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் ஜெனீ வா வை ஒரு களமாக பாவிக்க வேண்டியுள்ளது. சர்வ தேச சமூகத்தின் நிகழ்ச்சி நிரலில் அமைந்துள்ள Transitional justice பொறிமுறையினை நாம் கோரவில்லை. ஈடுசெய் Remedial justice நீதிப்பொறிமுறையினைத்தான் நாம் கோரியிருந்தோம். இது நமது நிகழ்ச்சி நிரல். சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலோ அல்லது ஐ.நாவின் இனப்படுகொலை தடுப்புக்கான உடன்பாட்டுக்கு அமைய, சிறிலங்காவை அனைத்துலக நீதிமன்றத்தில் நிறுத்துதல், அரசியல் தீர்வுக்கான பொதுவாக்கெடுப்பு ஆகிய நிகழ்ச்சி நிரலின் உள்ளம்சங்களாகவுள்ளன.

மேலும் சிறிலங்காவில் காணப்படுவது பௌத்த பேரினவாத இனநாயகமே அன்றி ஜனநாயக அல்ல. சிங்கள தேசத்தின் ஜனநாயகத்தை மீட்டெடுப்பதல்ல தமிழர் தேசத்தின் நோக்கம். அது மேலும் மேலும் சிறிலங்காவில் சிங்கள பௌத்த இனநாயகத்தையே இறுக்கமடையச் செய்யும். நமக்கான நீதிக்காகவும், அரசியல் இறையாண்மைக்காகவும் போராடுவதே தமிழர் தேசத்தின் தேவை என பிரதமர் வி.உருத்திரகுமாரன் இடித்துரைத்தார்.

 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*