இராணுவ வெளியேற்றத்துக்கான மக்கள் போராட்டம்: பிரதமர் வி.உருத்திரகுமாரனது மே-18 தமிழீழத் தேசிய துக்க நாள் உரை

Link: https://www.einpresswire.com/article/572869121/today-may-18-former-president-of-armenia-armen-sarkissian-will-deliver-mullivaikal-memorial-lecture-tgte

“தமிழர் தாயகத்தில் உள்ள சிங்கள இராணுவத்தை தத்தம் ஊருக்குத் திரும்புமாறு தமிழ் மக்கள் தாயகப் பகுதியில் போராட்டத்தை ஆரம்பித்தல் காலத்தின் தேவையாக உள்ளது”

NEW YORK, UNITED STATES, May 18, 2022 /EINPresswire.com/ —

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரனது மே-18 தமிழீழத் தேசிய துக்க நாள் உரை, நான்கு முக்கிய விடயங்களை முன்வைத்துள்ளதோடு சமகாலத்தின் பல்வேறு விடயங்களை சுட்டிக்காட்டி ஈழத்தமிழர்களின் நீதிக்கும் அரசியல் இறைமைக்குமான போராட்டத்தின் செயல்வழிப்பாதையினைsri-lanka-military முன்வைத்துள்ளது.

இலங்கைத்தீவின் தற்போதைய பொருளாதார நெருக்கடி உலகின் கவனத்தைக் பெற்றுள்ள நிலையில், இப்பொருளாதார நெருக்கடிக்கு போரினதும் இராணுவச் செலவினதும் பங்கை அனைத்துலகின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதோடு, தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்துள்ள சிறிலங்கா இராணுவ வெளியேற்றத்தை வலியுறுத்தி மக்கள் போராட்டங்கள் தாயக அரசியல் தலைவர்கள் முன்னெடுக்க வேண்டும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தென்னிலங்கை போராட்டகாரர்கள் நோக்கி தனது செய்தியினை வழங்கிய பிரதமர் வி.உருத்திரகுமாரன், தமிழ் மக்களின் அமைதிவழிப் போராட்டத்தினை, தமிழின அழிப்புப் போராக மாற்றியது சிறிலங்கா அரசே தான் என்பதனை நீங்கள் புரிந்து கொண்டீர்கள் என்றால், சிறிலங்காவில் ஜனநாயகம் என்பது இனநாயகமாக மாறிப்போன கோளாறை நிவர்த்தி செய்வது உணர்ந்து கொள்வது அவசியம் எனக் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அரசு சிங்கள பௌத்த இனவாத அரசாக இறுக்கமடைந்துள்ளது தவறு என்பதனை நீங்கள் ஏற்றுக் கொண்டால் ஜனநாயக அடிப்படையில் ஒரு இனம் தனது அரசியல் தலைவிதியை தானே நிர்ணயிக்கும் உரிமையின் அடிப்படையில் புதியதொரு அரச கட்டமைப்பை உருவாக்குவதற்கான போராட்டமாக உங்கள் போராட்டத்தை வடிவமைத்துக் கொள்வீர்கள் என இடித்துரைத்துள்ளார்.

இராஜபக்சக்களைத் துரத்தும் உங்கள் போராட்டம் தமிழ் மக்களினது தேசியனப் பிரச்சனையினை ஏற்றுக் கொண்டு அதற்கு நீதியான அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதனையோ, முள்ளிவாய்க்கால் இனவழிப்புக் குறித்து தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோருவது அல்லது வருத்தம் தெரிவிப்பது போன்ற அம்சங்கள் எவற்றையும் தென்னிலங்கை போராட்டம் உள்ளடக்கவில்லை என்பதனையும் நாம் கவலையுடன் அவதானிக்கிறோம் எனவும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

மேலும் உலக நாடுகள் பலவும் உக்ரேய்னில் நடப்பது இனவழிப்பு எனத் தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளன நிலையில், தமிழின அழிப்பை உலக நாடுகளை அங்கீகரிக்க வைக்க முயல வேண்டும் எனத் தெரிவித்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன், இனவழிப்பு என்பது சட்டம் சார்ந்ததொரு விடயம் மட்டுமல்ல. இது அரசியல், தார்மீகப் பரிமாணம் கொண்டதொரு விடயம் என்பதனையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரதமர் வி.உருத்திரகுமாரனது தமிழீழத் தேசிய துக்க நாள் செய்தியின் முழுவடிவம் : https://youtu.be/lxPnFNAB_yU

இன்று தமிழீழத் தேசியத் துக்க நாள்.

இன்றைய நாள் இலங்கைத்தீவில் அரசாக நிறுவனமயப் பட்டிருக்கும் சிங்கள ,னவாதப்பூதம் தமிழீழ மக்கள்மீது நடாத்திய தமிழின அழிப்பின் கொடுமைகளை நாம் உலகெங்கும் உரத்துச் சொல்லும் நாள்.

இற்றைக்கு 13 ஆண்டுகளுக்கு முன்னர் 2009 ஆம் ஆண்டு தமிழீழத் தாயகத்தின் வன்னிநிலப்பரப்பெங்கும் சிறிலங்கா ஆக்கிரமிப்புப் படையினாரால் பெரும் தமிழினவழிப்பு திட்டமிட்டு நடாத்தப்பட்டது. இத் தமிழினவழிப்பு 2009 ஆம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் உச்சம் கண்டது. மே 18 ஆம் நாள் தமிழ் மக்களின் இரத்தவாடை காற்றுமண்டலமெங்கும் பரவி நிரம்பியிருக்க சிங்கள பௌத்த பேரினவாதம் தமிழீழத் தாயகத்தை முழுமையாக ஆக்கிரமித்தது.

இந்த இனவழிப்பு தமிழீழ மக்களுக்குத் தந்த துயர் எழுத்தில் வர்ணிக்க முடியாதது. வார்த்தைகளால் விபரிக்க முடியாதது. இத் துயரின் நினைவுகளைத் தலைமுறை தலைமுறையாகப் பேணிக் கொள்ளும் வகையில் தமிழீழத் தேசியத் துக்க நாள் பிரகடனம் செய்யப்பட்டிருக்கிறது.

21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரும் இனவழிப்பாக அமைந்த தமிழினவழிப்பில் ஏறத்தாழ 150,000 மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். பெரும் எண்ணிக்கையானோர் அங்கவீனமாக்கப்பட்டுள்ளனர். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை இத் தமிழின அழிப்புக்கு இரையாக்கப்பட்டுள்ளனர்.

இத் தமிழின அழிப்பு, நடைபெற்ற யுத்தத்தின் விளைவான வெறும் பாதிப்புக்களாகவோ அல்லது யுத்தத்தில் ஈடுபட்ட சிறிலங்காப்படையினரின் யுத்தவிதி மீறலாகவோ அமைந்தவை அல்ல. இவை எந்தவகையிலும் யுத்தக்குற்றங்கள் எனும் பட்டியலினுள் சுருக்கி விட முடியாதவை.

இலங்கைத்தீவில் தமிழ்த் தேசிய இனத்தைக் கருவறுத்து, தமிழ் மக்களை உதிரிகளாக வலுவிழக்கச் செய்து, சிங்கள பௌத்த மேலாண்மையினை ஈழத் தமிழர் தாயகத்தின் மீது நிறுவி, எமது தமிழீழத் தாயகத்தை முழுமையாகவும் முடிவாகவும் ஆக்கிரமித்து விடுவதற்கு சிங்கள பௌத்த இனவாத சிறிலங்கா அரசு நடாத்திய திட்டமிடப்பட்ட தமிழின அழிப்பே முள்ளிவாய்க்காலில் அரங்கேறியது. இதனை நாம் மீண்டும் மீணடும் அனைத்துலக சமூகத்துக்கு இன்றைய நாளில் இடித்துச் சொல்கிறோம்.

உலகுக்கு ஜனநாயகத்தையும் மனித நாகரிகத்தையும் போதிக்கும் மேற்குலக ஜனநாயக நாடுகளும் இத் தமிழின அழிப்பில் பங்கெடுத்து தமது கைகளில் இரத்தக்கறைகளைப் படியச் செய்துள்ளன என்பதனையும் நாம் சுட்டிக் காட்டுகிறோம்.

ஈழத் தமிழ் மக்கள் இனவழிப்புக்கு உள்ளாக்கப்படுவது இந்திய ஆக்கிரமிப்புக் குறித்து சிங்கள பௌத்த இனவாதம் கொண்டிருக்கம் அச்சம் காரணமாகத்தான் என அறிஞர்கள் சுட்டிக் காட்டியிருக்கும் நிலையிலும் சிங்கள இனவாத அரசின் தமிழின அழிப்புக்கு இந்திய ஒன்றிய அரசும் உறுதுணையாக இருந்தது என்பது நமது மக்களைப் பெரும் வேதனைக்கு உள்ளாக்கியிருந்தது.

நாம் இந்தியாவையும் மேற்குலக ஜனநாயக நாடுகளையும் நட்பு சக்திகளாகக் கொண்டு தமிழின அழிப்புக்கு நீதி கோரும் போராட்டத்தை மேற் கொண்டு வருகிறோம். தாம் செய்த வரலாற்றுத் தவறுக்கு பிராயச்சித்தம் தேடுமாறு நாம் இந் நாடுகளை இன்றைய நாளில் கோருகிறோம்.

எமது மக்களுக்கு எதிராக சிங்களத்தின் இனவழிப்பில் ஏதோவொரு வகையில் பங்கெடுத்தவர்கள் என்ற வகையில் எமது மக்களுக்கு நீதி கிடைப்பதற்கு ஆவன செய்ய வேண்டிய தார்மீகக் கடப்பாடு இந் நாடுகளுக்கு உள்ளது. இக் கடப்பாட்டை காலதாமதமின்றி ஆற்றும்படி இன்றைய தமிழீழத் தேசியத் துக்க நாளில் நாம் இந் நாடுகளைக் கோருகிறோம்.

முள்ளிவாய்க்கால் தமிழீழ இன அழிப்புக்கு நீதி கிடைக்கும் வரை உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் நீதிக்கான தமது போராட்டத்தை நடாத்திக் கொண்டுதான் இருப்பார்கள். இப் போராட்டம் நீதி கிடைக்கும்வரை தொடரும். முள்ளிவாய்க்கால் தமிழினவழிப்பின் நினைவுகள் தலைமுறை தலைமுறையாக நிலைத்திருக்கும்.

இன்றைய தமிழீழத் தேசியத் துக்க நாளில் சிங்களத்தின் தமிழினவழிப்பில் கொல்லப்பட்ட அனைத்து உறவுகளையும் நமது நெஞ்சிருத்தி, தலைதாழ்த்தி எமது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்பான மக்களே,

இலங்கைத்தீவிலும் உலகப்பரப்பிலும் ,ரண்டு முக்கியமான நிகழ்வுகளை தற்போதய காலம் பதிவு செய்து வருகிறது.

இலங்கைத்தீவு வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருக்கிறது. ,ந் நெருக்கடிக்கு இராஜபக்சக்களின் ஊழலும் நிர்வாகச்சீர்கேடும்தான் பிரதான காரணங்கள் என்பதால் இவர்களைத் துரத்தும் போராட்டம் தென்னிலங்கையில் நடைபெற்று வருகிறது. நாம் இதிகாசக் கதைகளில் படிப்பது போன்று அண்ணனைப் பலிகொடுத்து தனது அதிகாரத்தைத் தக்க வைக்க தம்பி போராட்டத்தை நடத்துகிறாரோ அல்லது அண்ணனும் தம்பியும் இணைந்து தமது குடும்ப அதிகாரத்தை பாதுகாப்பதற்கான ஆட்டத்தை நடாத்துகிறார்களோ என்று பலர் மத்தியிலும் எழும்பும் கேள்விக்குக் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

எது எவ்வாறாக இருந்தாலும் இன்று தென்னிலங்கையில் போராட்டக்களத்தில் நிற்கும் தோழர்களுக்கும் சிங்கள மக்களுக்கும் சில விடயங்களை ,ன்றைய நாளில் நாம் தெரிவிக்க விரும்புகிறோம்.

சிறிலங்கா அரசு தமிழீழ மக்கள்மீது நடாத்திய இனவழிப்புப்போரும், முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பும் இன்று முழுத்தீவும் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிக்கு வித்திட்ட அடிப்படைக் காரணங்கள் என்பதனை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

யுத்தத்துக்காகப் பெருந்தொகைப் பணம் இராணுவச் செலவுகளுக்காகப் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. நாட்டின் பெரும் களம் நாசகார இராணுவ உபகரணங்களுக்காக அந்நிய நாடுகளுக்குத் தாரை வார்க்ப்பட்டிருக்கிறது. ஊழலும் நிர்வாகச் சீர்கேடும் யுத்த வெற்றி கொண்டு மறைக்கப்பட்டிருக்கிறது. ,ன்றும் பெருந்தொகைப் பணம் இராணுவச் செலவுகளுக்காக ஒதுக்கப்பட்டு வருகிறது.

இப் பெரும் போர் இயந்திரப்பொறிமுறையைச் கட்டி வளர்த்துத் தீனி போடுவதற்கென பல ஆண்டுகளாக சிறிலங்கா அரசு விரயம் செய்த பொருளாதார வளமே இன்றைய பொருளாதார நெருக்கடி தோன்றுவதற்கான அடித்தளத்தை இட்டது. இதனை உங்களது போராட்டக்களத்தில் நீங்கள் எச் சந்தர்ப்பத்திலும் வெளிப்படுத்தாமை எமக்கு ஏமாற்றத்தை; தருகிறது.

தமிழ் மக்களுக்கு எதிரான இனவழிப்;புப் போரை நிறுத்து என அன்று நீங்கள் குரல் எழுப்பியிருந்தால், வீதிக்கு இறங்கிப் போராடியிருந்தால், அப் போர்வ்வளவு காலம் நீடித்திருக்க மாட்டாது. போர்க்காலத்தில் போர் அரக்கன் தின்று தீர்த்த பெரும் பொருளாதார வளத்தைப் பாதுகாத்திருக்கலாம். முள்ளிவாய்க்காலில் தமிழின அழிப்பை மேற்கொண்ட பெரும்பழியில் ,ருந்தும் சிங்கள தேசம் தப்பித்திருக்கலாம். இன்றைய பொருளாதார நெருக்கடி தோன்றுவதற்கான அடிப்படைக் காரணங்களை முன்கூட்டியே களைந்திருக்கலாம்.

இன்றைய நெருக்கடிக்கு கொரோனா பெருந்தொற்றையும், இராஜபக்சக்களின் ஊழல், நிர்வாகச்சீர்கேட்டையும் மட்டும் காரணமாக்காது ஆழ்ந்து சிந்தித்தால் நாம் கூறுவதில் உள்ள உண்மை உங்களுக்குப் புரியும்.

கொரோனா பெருந்தொற்று உலகெங்கும்தான் தாக்கம் விளைவித்தது. உலகில் பல நாடுகளில் ஊழலும் நிர்வாகச் சீர்கேடும் நிறைந்துதான் ,ருக்கின்றன. எனினும் அங்கெல்லாம் இலங்கைத்தீவில் ஏற்பட்டது போன்ற பெரும் நெருக்கடி ஏற்பட்டு விடவில்லை என்பதனையும் இணைத்துச் சிந்தித்து போர் ஏற்படுத்திய தாக்கத்தை மதிப்பீடு செய்வது பயன் தரும்.

தமிழ் மக்கள் தமக்குரிய உரிமைகளை அகிம்சை வழியில் கோரிப் போராடி வந்ததொரு சூழலில் அதனை தமிழினவழிப்புப்போராக மாற்றியது சிறிலங்கா அரசே தான் என்பதனை நீங்கள் புரிந்து கொண்டீர்கள் என்றால், சிறிலங்காவில் ஜனநாயகம் என்பது இனநாயகமாக மாறிப்போன கோளாறை நிவர்த்தி செய்வது அவசியம் என்பதனை உணர்ந்து கொண்டால், சிறிலங்கா அரசு சிங்கள பௌத்த ,னவாத அரசாக இறுக்கமடைந்துள்ளது தவறு என்பதனை நீங்கள் ஏற்றுக் கொண்டால் ஜனநாயக அடிப்படையில் ஒரு இனம் தனது அரசியல் தலைவிதியை தானே நிர்ணயிக்கும் உரிமையின் அடிப்படையில் புதியதொரு அரச கட்டமைப்பை உருவாக்குவதற்கான போராட்டமாக உங்கள் போராட்டத்தை வடிவமைத்துக் கொள்ளுங்கள்.

ஆனால், எமது அவதானிப்பில் இராஜபக்சக்களைத் துரத்தும் உங்கள் போராட்டம் தமிழ் மக்களினது தேசிய ,னப் பிரச்சனையினை ஏற்றுக் கொண்டு அதற்கு நீதியான அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதனையோ, முள்ளிவாய்க்கால் இனவழிப்புக் குறித்து தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோருவது அல்லது வருத்தம் தெரிவிப்பது போன்ற அம்சங்கள் எவற்றையும் உள்ளடக்கவில்லை என்பதனையும் நாம் கவலையுடன் அவதானிக்கிறோம்.

ஈழத் தமிழ் மக்களின் தேசத் தகைமையினையும், தமிழர் தாயகப்பிரதேசத்தையும் அங்கீகரித்து சுயநிர்ணய பரிகார நீதியின் அடிப்படையில் அரசியல் தீர்வு காண்பதற்கான பற்றுறுதியினை வளர்த்துக் கொள்வதும், தமிழின அழிப்புக்கு நீதி கோரும் போராட்டத்தில்; இணைந்து கொள்வதும் நமது தோழமை உணர்வினை வளர்க்கத் துணை செய்யும்.

இன்றைய தமிழீழ தேசிய துக்க நாளில் முள்ளிவாய்க்கால் தமிழினவழிப்பில் கொல்லப்பட்ட மக்களின் நினைவுகளுடன் இக் கருத்துக்களை சிங்கள தேசத்துடன் நாம் பகிர்ந்து கொள்கிறோம்.

உக்ரேய்ன் மீது ரஸ்யா நடாத்தி வரும் போர் இன்று பலரது கவனத்தையும் உலகின் பல பாகங்களிலும் ஈர்த்துள்ளது. இப் போர் உலக அரசியல் ஒழுங்கில் மாற்றங்களை ஏற்படுத்தும் எனவும் கணிக்கப்படுகிறது.

போருக்கான காரணங்களையும் இது குறித்த வாதப்பிரதிவாதங்களையும் கடந்து நோக்கினால் இப் போர் மனித குலத்துக்கும் இயற்கைக்கும் ஏற்படுத்தும் அனர்த்தம் மிகப் பெரியது. போரினால் மக்கள் கொல்லப்பட்டும் ஏதிலிகளாக நாட்டை விட்டு தப்பியோடும் நிலையும் தோன்றியுள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட உக்ரேனிய மக்களுடன் நாம் தோழமையுணர்வை வெளிப்படுத்திக் கொள்கிறோம்.

இப் போரின் ஓரம்சமாக இனவழிப்பு என்பது அனைத்துலக அரங்கில் ஒரு பேசுபொருளாக மாறியுள்ளது. உலக அரசுகளின் நீதித் தராசு தமது நலன்களின் அடிப்படையில் நீதியை அளக்கும் என்ற புரிதலுடன் உக்ரேய்ன்- ரஸ்யா போர்ச்சூழலில் இனவழிப்புத் தொடர்பாகக் குவிக்கப்படும் கவனம் தமிழினஅழிப்புக்கு எதிராக நீதி கோரும் தமிழ் மக்களின் போராட்டத்தக்கு வலுச் சேர்க்கக்கூடிய வாய்ப்புக்கள் குறித்து நாம் ஆராய வேண்டும்.

உலகில் பத்துக்கும் மேற்பட்ட நாடுகள் உக்ரேய்னில் நடப்பது ,னவழிப்பு எனத் தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளன. இனவழிப்புக்கு எதிரான நடவடிக்கைக்கு அங்கீகாரம் தேடும் முயற்சியே இத்தகைய தீர்மானங்களாகும். ,னவழிப்பு என்பது சட்டம் சார்ந்ததொரு விடயம் மட்டுமல்ல. இது அரசியல், தார்மீகப் பரிமாணம் கொண்டதொரு விடயமும் தான்.

நாமும் தமிழின அழிப்பை உலக நாடுகளை அங்கீகரிக்க வைக்க முயல வேண்டும். இதற்கு தமிழ் மக்கள் மத்தியில் உள்ள அமைப்புகளும் அரசியற்தலைவர்களும் தமிழின அழிபு;புக்கு நீதி கோரிச் செயற்பட வேண்டும். தமிழின அழிப்புத் தொடர்பாக தீர்;மானங்களை சாத்தியமான இடங்களிலெல்லாம் நிறைவேற்றி அவற்றை உலக நாடுகளுக்கு அனுப்பி அந்நாடுகளுடன் உறவாடலை வளர்க்க முயல வேண்டும்.

முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நடைபெற்று 13 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. எனினும் இவ்வினவழிப்பு ஏற்படுத்திய தாக்கத்தில் ,ருந்து எம்மால் இன்னமும் விடுபட முடியாமல் இருக்கிறது. இவ்வினவழிப்புக்கு எதிராக எமக்கு இன்னும் நீதி கிடைத்து விடவில்ல என்பதும் எமது மனதை வாட்டுகிறது. இதற்காக நாம் சோர்வடைந்து விட முடியாது.

எம்மீது மேற்கொள்ளப்பட்ட இனவழிப்புக்கு நீதி கோரி நாம் நிகழ்த்தும் போராட்டம் அனைத்துலகில் இன்னும் கூடிய கவனத்தைப் பெறுவதற்கு உரிய ஏற்பாடுகளைத் ஈழத் தமிழ் மக்கள் தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் ,ன்னும் வலுவாக மேற்கோள்ள வேண்டும். இதற்குத் தமிழ் நாட்டு மக்களும் உலகத் தமிழ் மக்களும் உறுதுணையாகச் செயற்பட வேண்டும்.

தற்போதய சூழலில் இலங்கைத்தீவின் பொருளாதார நெருக்கடி உலகின் கவனத்தைக் பெற்றுள்ளது. இப் பொருளாதார நெருக்கடிக்கு போரினதும் ,ராணுவச் செலவினதும் பங்கை நாம் நாம் அனைத்துலகின் கவனத்துக்கு கொண்டு வர வேண்டும்.

போரில் சிறிலங்கா ஆயுதப்படையினர் மேற்கோண்ட இனவழிப்பைச் சுட்டிக் காட்டியும்;; போரின் பின் நாம் ஆக்கிரமிக்கப்பட்ட மக்களாக வாழ்வதற்கு தமிழர் தாயகத்தில் குவிக்கப்பட்டுள்;ள இராணுவத்தினர் காரணமாக அமைவதனை வெளிப்படுத்தியும், பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண நாட்டின் இராணுவச் செலவீனம் குறைக்கப்பட வேண்டும் என்பதனைச் சுட்டிக் காட்டியும் இராணுவத்தினரின் எண்ணிக்கையினைக் குறைக்குமாறும், தமிழர் தாயகத்தில் உள்ள சிங்கள இராணுவத்தை தத்தம் ஊருக்குத் திரும்புமாறும் தமிழ் மக்கள் தாயகப் பகுதியில் போராட்டத்தை ஆரம்பித்தல் காலத்தின் தேவையாக உள்ளது. இதற்கு ஆதரவான போராட்டங்களை புலம்பெயர் நாடுகளிலும், தமிழகத்திலும் தமிழ் மக்கள் வாழும் ஏனைய உலக நாடுகளிலும் நாம் மேற்கொள்ளலாம்.

இத்தகைய போராட்டம் தமிழ் மக்கள் மீது சிங்களம் மேற்கொண்ட ,னவழிப்பு மீது அனைத்துலகக் கவனத்தைக் கொண்டு வர இன்றைய காலகட்டத்தில் துணைபுரியும். இவ் விடயம் குறித்து தாயகத்தில் உள்ள அரசியல், சமூகத் தலைவர்கள் கவனம் கொள்ளல் நன்று.

முள்ளிவாய்க்கால் ஈகைகளின் மூச்சுக்காற்று எம்முடன் கலந்து நின்று எமது நீதிக்கான போராட்டத்தை வலுவாக முன்னெடுக்குமாறு நம்மை உந்துகிறது. முள்ளிவாய்க்கால் இனவழிப்பில்; தம்முயிர் ஈந்தவர்கள் நினைவுடன் தமிழினவழிப்புக்கு எதிராக நீதிகோரும் நமது போராட்டத்தை தொடர்ந்து ஓயாது முன்னெடுப்போம் என ,ன்றைய நாளில் உறுதி எடுத்துக் கொள்வோம் என பிரதமர் வி.உருத்திரகுமாரனது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் (நா.க.த.அ) பற்றி Transnational Government of Tamil Eelam (TGTE)

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (நா.க.த.அ) என்பது, ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, உலகெங்கிலும் பல நாடுகளில் வாழும் இலங்கைத் தீவைச் சோந்த பத்து இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்களுக்கான அரசாங்கமாகும்.

2009ஆம் ஆண்டு இலங்கை அரசால் பெருமளவில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நா.க.த.அ. உருவாக்கப்பட்டது. 135 அரசவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக உலகெங்கிலும் வாழும் தமிழர்களிடையே, சர்வதேச கண்காணிப்பாளர்களின் மேற்பார்வையில் நா.க.த.அ, மூன்று தடவை தேர்தல்களை நடாத்தியுள்ளது.

இதன் அரசவையானது, மேலவை (செனற் சபை), பிரதிநிதிகள் அவை என இரண்டு அவைகளையும் மற்றும் அமைச்சரவை ஒன்றையும் கொண்டுள்ளது.

தேசியம், தாயகம் மற்றும் சுயநிர்ணயம் ஆகிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு,அமைதியான ஜனநாயக மற்றும் இராஜதந்திர வழிகளில் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுக்கும் பரப்புரையை நா.க.த.அ முன்னெடுத்துள்ளது. மேலும், அதன் அரசியல் நோக்கங்களை,அமைதியான வழிகளில் மட்டுமே அடைய வேண்டும் எனவும் அதன் அரசியலமைப்பு வலியுறுத்துகிறது.

தமிழ் மக்களுக்கு எதிராகப் போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை புரிந்த குற்றவாளிகளைப் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்த வேண்டும் என்று சர்வதேச சமூகத்திடம் கோருவதுடன், தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்க பொது சன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் நா.க.த.அ. வலியுறுத்துகிறது.

நா.க.த.அ. இன் பிரதமர் திரு.விசுவநாதன் உருத்ரகுமாரன், நியூயோர்க்கைத் தளமாக்க் கொண்ட ஒரு வழக்கறிஞர் ஆவார்.

மின்னஞ்சல் முகவரி: pmo@tgte.org இணையத்தள முகவரி: www.tgte-us.org கீச்சக முகவரி: @TGTE_PMO Transnational Government of Tamil Eelam TGTE +1 614-202-3377 r.thave@tgte.org Visit us on social media: Facebook Twitter

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*