ஜனாதிபதி ரணிலுக்கெதிராக நியுயோக்கில் உள்ள ஐ நா முன்றலில் மாபெரும் எதிரப்புப் போராட்டத்திற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு!

மாபெரும் எதிரப்புப் போராட்டத்திற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு!

Link: https://thodarum.com/thileepan-unnanilai-arapporaattam-tgte/

ஜனாதிபதி ரணிலுக்கெதிராக நியுயோக்கில் உள்ள ஐ நா முன்றலில் மாபெரும் எதிரப்புப் போராட்டத்திற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு!

இலங்கையில் நடைபெறும் தொடர் இனப்படுகொலைப் பங்காளி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவுக்கு எதிராக வட அமெரிக்க தமிழ்மக்களை அணிதிரளுமாறு நாடுகடந்த அரசாங்கத்தின் அழைப்பு.

21/09/2023 அன்று நியுயோக் மாநகரில் அமைந்துள்ள ஐ.நா வில்பேசுவதற்கு வருகைதரும் சிங்களப் பேரினவாதி ரணில் ,வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட அனைவரும் கொல்லப்பட்டுவிட்டதாக க் கூறியவர் எமது உடன் பிறப்புகளின் கொலையில் இவருக்கும் தொடர்பு இருப்பது தீவிர சந்தேகத்தை எழுப்புகிறது. இனப்படுகொலையாளிகளான முன்னாள் ஐனாதிபதி கோத்தபாயா, மகிந்த ராஐபக்ச, இராணுவத் தளபதிகள், புலனாய்வாளர்கள் உட்பட அனைவரையம் பாதுகாப்பதற்காக பதவியும் வழங்கி தொடர்ந்து காப்பாற்றி வருகின்றார், ரணில் பெளத்த மயமாக்கல், சிங்களக் குடியேற்றத்தை தீவிரமாக செயற்படுத்தும் ரணிலை அமெரிக்காவில் விரட்டி அடிப்போம்!அம்பலப்படுத்துவோம்!!

அமெரிக்கா,கனடாவாழ் தமிழர்கள் தங்கள் வரலாற்றுக் கடமையை நிறை வேற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உரிமையுடன் உங்கள் அனைவர்க்கும் அழைப்பு விடுக்கின்றது முக்கிய குறிப்பு: தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு ஊர்தியை அடித்து நொருக்குமாறும் , தமிழர்களை அடித்து கொல்லுமாறும் ,உத்தரவு பிறப்பித்த ரணில் அமெரிக்காவில் வந்து சொற்பொழிவாற்றுவதை நாம் வேடிக்கைபார்ப்பதா?தமிழர்களே நியுயோர்க் ஐ.நா முன்றில் அணிதிரள்வோம் ரணிலுக்கு தமிழர்களின் எதிர்பையும், உலகிற்கு உண்மையையும்,எடுத்துரைப்போம்.

இடம் : UN Park 47th & 1st Ave

New York. காலம் : 21/09/2023 வியாழக்கிழமை

நேரம் :12 .00 Pm – 1.00 Pm தொடர்புகட்கு : கமல்.: 917-740-8836 கருணா :917-880-0320 லோகேஸ்: 917-705-5650

“தமிழர் தலைவிதி தமிழர் கையில்” “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*