Back

26/03/2024

ஆஸ்திரேலியா, நியுசீலாந்திற்கான நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஊடக அறிக்கை

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது அரசவைத் தேர்தல்

எதிர்வரும் வைகாசி 5ம் தேதி (05/05/2024) அன்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது அரசவைக்கான புதிய அங்கத்தவர்களை தெரிவு செய்யும் தேர்தல்கள் உலகின் பல நாடுகளிலும் இடம் பெற உள்ளன.

ஆஸ்திரேலியா, நியுசீலாந்திற்கான (Australia/New-zealand) தேர்தலில் முறையே 10 உறுப்பினர்களும், 2 உறுப்பினர்களும் நாடுகடந்த தமிழீழ அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவுகள் இடம்பெறும்.

ஆஸ்திரேலியாவில் ஐந்து (5) தேர்தல் மாவட்டங்களிலிருந்தும் மொத்தம் 10 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளனர். நியுசீலாந்தில் இருந்து 02 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்

அண்மை காலங்களில், உலகின் பல நாடுகளின் பாராளுமன்றங்களில்  பெண்கள், இளையோருக்கான ஆசனங்கள் அதிகரிக்கப்பட்டு வருவதனை பல நாடுகளிலும் நாம் காணக்கூடியதாக உள்ளது. இந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தலிலும் பெண்கள்,  இளையோரின் பங்களிப்பினை ஊக்குவிப்பதற்காக பெண்களுக்கு குறைந்தபட்சம் 25 வீதம் (25%) ஆசனங்களும், இளையோருக்கு 25வீதம் (25%) ஆசனங்களும் ஒதுக்கப்-பட்டுள்ளன. குறிப்பாக ஆஸ்திரேலியா, நியுசீலாந்தில் பிறந்து வளர்ந்த அல்லது சிறு வயதிலேயே ஆஸ்திரேலியா, நியுசீலாந்திற்கு புலம்பெயர்ந்து வந்த இளையோரின் பங்களிப்பினை மிகவும் வரவேற்கிறோம்.

ஆஸ்திரேலியாவிற்கான (Australia)  5 தேர்தல் மாவட்டங்கள் பின்வருமாறு:

தேர்தல் மாவட்டம் 1:

  • நியூ சவுத்வேல்ஸ்  (NSW State, Australia)  மாநிலம்

இந்த தேர்தல் மாவட்டத்திலிருந்து 4 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

தேர்தல் மாவட்டம் 2:

  • விக்டோரியா மாநிலம் (Victoria State, Australia)

இந்த தேர்தல் மாவட்டத்திலிருந்து 3 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

தேர்தல் மாவட்டம் 3:

  • மேற்கு ஆஸ்திரேலியா / தெற்கு ஆஸ்திரேலியா மாநிலங்கள் (Western Australia & South Australia)

இந்த தேர்தல் மாவட்டத்திலிருந்து 1 உறுப்பினர் தெரிவு செய்யப்படவுள்ளார்.

தேர்தல் மாவட்டம் 4:

  • டஸ்மேனியா / ஆஸ்திரேலியா தலைநகர் பிரதேசம் (Tasmania & Australian Capital Territory (ACT))

இந்த தேர்தல் மாவட்டத்திலிருந்து 1 உறுப்பினர் தெரிவு செய்யப்படவுள்ளார்.

தேர்தல் மாவட்டம் 5:

  • குயின்ஸ்லாந்து மாநிலம் / வடக்கு பிரதேசம் (Queensland & Northern Territory (NT))

இந்த தேர்தல் மாவட்டத்திலிருந்து 1 உறுப்பினர் தெரிவு செய்யப்படவுள்ளார்.

 நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது தவணைக்  காலத்துக்கான வேட்புமனுதாக்கல்  மார்ச் 15ம் நாளன்று  தொடங்கி எதிர்வரும் ஏப்ரல் 10ம் திகதி நள்ளிரவு வரை  வேட்பு மனுதாக்கல்  ஏற்றுக்கொள்ளப்படும்.

எதிர்வரும் மே 05, 2024 அன்று பொதுத்தேர்தல் இடம்பெறவுள்ளது.

தேர்தல் நடைமுறை விதிகள், வேட்புமனுக்கள் மற்றும் இதர விடயங்கள்  ஆஸ்திரேலியா, நியுசீலாந்து தேர்தல் ஆணையத்தின்  குறித்த  மின்னஞ்சல்  election.commissioner@tgte.org அல்லது kanagas.gopal202@outlook.com வழியே  பெற்றுக்  கொள்ளலாம்.

மேலதிக தொடர்புகளுக்கு :

pmo@tgte.org

www.tgte-us.org / www.tgte.org

நன்றி .

திரு. க. கோபலக்கிருஷ்ணன்

தேர்தல் ஆணையாளர் – ஆஸ்திரேலியா, நியுசீலாந்து