“பயங்கரவாதச் தடை சட்டத்துக்கு எதிரான முறையீட்டுக்கு என அமைக்கப்பட்ட, தற்சார்புத் தீர்ப்பாய ஆணையத்தின் முன் இந்த வாதங்கள் எடுத்துக் கொள்ளப்படும்”
விடுதலைப் புலிகள் மீதான தடை, ஜனநாயகரீதியாக செயற்படுகின்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கும், ஈழத்தமிழ் மக்கள் தமது அரசியல் விருப்பினை சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கும், தடையாக உள்ளது.”— விசுவநாதன் உருத்திரகுமாரன்LONDON, UNITED KINGDOM, June 20, 2019 /EINPresswire.com/ — தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானாவின் தடைக்கு எதிராக, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சட்ட நடவடிக்கையொன்றினை முன்னெடுத்துள்ளது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்க உறுப்பினர்கள் சார்பில் மட்ரிக்ஸ் (சேம்பர்ஸ் மற்றும் இலண்டன் பொருளியல் பயிலகத்தைச் – Matrix Chambers and the London School of Economics. ) சேர்ந்த பேராசிரியர் கானர் ஜியட்ரி ஆகியோர் வழக்கினை நடாத்துகின்றனர்.
நா.தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்களுடன் மேலும் சிலரும் இந்த சட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
வெடிப்பொருட்கள், கொடிகள் உள்ளிட்ட விடுதலைப் புலிகளை அடையாளப்படுத்தும் விடயங்களுடன், வாகனமொன்றையும் ஒருசிலரையும் தாம் கைது செய்ததாக, சிறிலங்கா காவல்துறை 2018ம் ஆண்டில் வெளியிட்டிருந்த செய்தியினை காரணமாக்காட்டி, விடுதலைப் புலிகள் மீதான தடைக்கு பிரித்தானிய உள்துறை அமைச்சகம் கோரியிருந்தது. வேறு எந்த தகவல்களும் பிரித்தானிய உள்துறை அமைச்சகத்திடம் காண்படவில்லை.
இந்நிலையில் விடுதலைப் புலிகள் மீதான தடை என்பது ஜனநாயகரீதியாக செயற்படுகின்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு பெரும் தடையாக இருப்பதோடு, ஈழத்தமிழ் மக்கள் தமது அரசியல் விருப்பினை சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கும் அது இடைஞ்சலாகவுள்ளதென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது சட்டவாதத்தில் வாதிட்டுள்ளது.
மேலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வாதத்தில், சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழ அரசை அமைப்பதே தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் இலக்காக இருந்தது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் இலக்கும் இதுவாகவே இருக்கின்றது.
பிரித்தானியாவின் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையினால், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் செயல்முனைப்பில் பொதுமக்கள் பங்கேற்பதில் அச்சம் கலந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் பணியைப் பெருதும் பாதிக்கின்றது.
2009ம் ஆண்டு போரின் ஓய்வுக்கு பின்னராக இந்த பத்தாண்டு காலத்தில் விடுதலைப் புலிகள் எந்தவித வன்முறைச் சம்பவங்களிலும் ஈடுபடவில்லை இடித்துரைக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளை மீதான பிரித்தானியாவின் தடை என்பது, தமிழர்கள் அனைவரினதும் அரசியல் செயற்பாடுகளையும் அடக்கி ஒடுக்குவதே என்றும், இந்த நடைமுறைக்கே சிறிலங்கா அரசாங்கம் ஊக்கமளிக்கிறது என்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன் அவர் இவ்விடயம் தொடர்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.
விசுவநாதன் உருத்திரகுமாரன் அவர்கள், விடுதலைப் புலிகள் மீதான அமெரிக்காவின் தடைக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தியவர் என்பதோடு, விடுதலைப் புலிகளின் சர்வதேச சட்ட ஆலோசகராக இருந்தர்.
பயங்கரவாதச் தடை சட்டத்துக்கு எதிரான முறையீட்டுக்கு என அமைக்கப்பட்ட, தற்சார்புத் தீர்ப்பாய ஆணையத்தின் முன் இந்த வாதங்கள் எடுத்துக் கொள்ளப்படும் என்பதோடு, விடுதலைப் புலிகளின் தடையினை நீக்கம் செய்யும்படி பிரித்தானிய உள்துறை அமைச்சகத்துக்கு ஆணையிடும் அதிகாரம் இந்த ஆணையத்துக்கு உண்டு.
பிந்திய தகவல்களின் படி, பிரித்தானிய உள்துறை அமைச்சகம் தம் வசமுள்ள சாட்சியங்களை இரகசியமான முறையில் இந்த ஆணையத்திடம் சமர்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
பிரித்தானிய உள்துறை அமைச்கத்தின் இந்த இரகசிய நடவடிக்கை என்பது சட்ட நடைமுறைகளுக்கும், மனித உரிமைகளுக்கும் முரணானது என வாதிட இருக்கின்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், இவ்விசாரணை வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற வேண்டும் என தெரிவித்துள்ளது.
Twitter: @TGTE_PMO
Email: r.thave@tgte.org
Facebook: https://www.facebook.com/TGTE.Secretariat/
Web: www.tgte.org
Web: tgte-us.org
ENGLISH: https://www.einnews.com/pr_news/485305097/challenge-to-the-uk-ban-on-the-tamil-tigers
நாதம் ஊடகசேவை
இச்சட்ட நடவடிக்கை தொடர்பில் சர்வதேசஊடகங்களின் பார்வைகள் :
Challenge to the UK ban on the Tamil Tigers
https://www.tribuneindia.com/news/world/ltte-ban-faces-legal-challenge-in-uk/776835.html
https://www.outlookindia.com/newsscroll/ltte-ban-faces-legal-challenge-in-uk/1539748
https://www.devdiscourse.com/article/international/533611-sri-lankas-tgte-challenges-uks-proscription-order-imposed-on-ltte Transnational Government of Tamil Eelam (TGTE) நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் +1 614-202-3377