நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் வாக்களிப்பு நிறைவு பெற்றது !

1

தபால் மூலம் வாக்களிப்பு, நேரடி வாக்களிப்புகள் நிறைவுற்றுள்ள நிலையில் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கியுள்ளன.

2009ம் ஆண்டு தமிழர் தேசம் சிங்கள அரசினால் ஆக்கரிமிக்கபட்டு தமிழர்களுக்கான அரசியல் வெளி இல்லாத நிலையில், இலங்கைத்தீவுக்கு வெளியே அனைத்துலக அரசியல் வெளியில் உருவாகியதுதான் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ”— Transnational Government of Tamil Eelam (TGTE)LONDON, UNITED KINGDOM, April 30, 2019 /EINPresswire.com/ —

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது தவணைக் காலத்துக்கான தேர்தல் வாக்களிப்பு நிறைவு பெற்றது.

தபால் மூலம் வாக்களிப்பு, நேரடி வாக்களிப்புகள் நிறைவுற்றுள்ள நிலையில் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கியுள்ளன.

பிரித்தானியாவில் இடம்பெற்றிருந்த தேர்தலில் வேட்பாளர்கள் பலரும் ஆர்வத்துடன் இத்தேர்தலில் போட்டியிட்டிருந்த நிலையில், தேர்தல் பரபரப்பாக காணப்பட்டிருந்தது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒவ்வொரு தவணைக்காலமும் ஜனநாயகப் பொறிமுறையாக தேர்தல் அறிவிக்கப்பட்டு, அதன் மூலம் தேர்வு செய்யப்படுகின்ற ஓர் தனித்த அமைப்பாக, அரசவை, மேலவை, பிரதமர், அமைச்சரவை என்ற கட்டமைப்புக்களைக் கொண்டதாக இருக்கின்றது.

2009ம் ஆண்டு தமிழர் தேசம் சிங்கள அரசினால் ஆக்கரிமிக்கபட்டு தமிழர்களுக்கான அரசியல் வெளி இல்லாத நிலையில், இலங்கைத்தீவுக்கு வெளியே அனைத்துலக அரசியல் வெளியில் உருவாகியதுதான் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்பது இங்கு குறிப்பிடதக்கது.

இந்நிலையில் இடம்பெற்றுள்ள தேர்தலின் முடிவுகள் மே 5ம் நாள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Transnational Government of Tamil Eelam TGTE +44 208-016-0797

 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
About Tamil Diaspora News.com 210 Articles

ஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரலாகவும், உலகமெல்லாம் பரவிவாழும் தமிழ் மக்களின் சார்பில் இந்த இணையம் செயற்படுகின்றது. எமது இன் விடுதலையை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணையவேண்டி கட்டாயத்தின் பேரில் எமது செய்திகளும் அறிக்கைகளும் அமைந்திருக்கும்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*