March 8, 2024
TGTE இன் தலைமை தேர்தல் ஆணையாளரின் நான்காவது பாராளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு
நான்காவது பாராளுமன்ற தேர்தல் பற்றிய விவரங்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் (நா.க.த.அ) தலைமை தேர்தல் ஆணையாளர் திரு. ரஞ்சன் மனோரஞ்சன் அறிவித்துள்ளார்.
நான்காவது பாராளுமன்றத்தேர்தல் மூலம் 12 நாடுகளில் இருந்து 115 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.
நா.க.த.அ அதன் முதல் தேர்தலை மே 2010 இல் நடத்தியது, அதன் முதல் பாராளுமன்றம் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் முதலாம் ஆண்டு நினைவு நாளான மே 18, 2010 அன்று அமெரிக்காவின் பிலடெல்பியா மாநிலத்தில் உள்ள சுதந்திர மண்டபத்தில் (The Independence Hall) கூடியது.
ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை, நா.க.த.அ பன்னிரண்டு நாடுகளில் தேர்தலை நடத்தி பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்து வருகின்றது.
நா.க.த.அ இன் பாராளுமன்ற உறுப்பினர்களின் பரிந்துரையின் அடிப்படையில், அரசியலமைப்பின் 1.10.2 பகுதியில் குறிப்பிட்டவாறு பிரதமர் திரு.விசுவநாதன் ருத்ரகுமாரன், பின்வருவோரை தேர்தல் ஆணையகத்தின் அங்கத்தவர்களாக நியமித்துள்ளார்.
திரு. ரஞ்சன் மனோரஞ்சன் (தலைவர்) – CPA, USA
திருமதி அனோஜா முத்துசாமி (குடிவரவு வழக்கறிஞர்) – பிரித்தானியா
திரு. ரமேஷ் பாலகிருஷ்ணர் (ஊடகவியலாளர்) – ஆஸ்திரேலியா
இந்த மூன்று தேர்தல் ஆணையர்களும் கூட்டாக தேர்தலை நிர்வகிப்பார்கள்.
தேர்தல் ஆணையகம் பின்வரும் நபர்களை நாடுவாரியாக நியமித்துள்ளது.
இத்தேர்தல் ஆணையர்கள் ஒவ்வொருவரும் அந்தந்த நாட்டின் தேர்தலைக் கண்காணிப்பார்கள்.
திரு. கோபாலகிருஷ்ணன் (இளைப்பாறிய கணக்காளர்) – ஆஸ்திரேலியா, நியூசீலாந்து
திரு. சிவநேசன் சின்னையா (ஆசிரியர் & ஊடகவியலாளர்) – கனடா
திரு. கருணாஹரன் (ஆசிரியர்) – டென்மார்க்
திரு.குமாரசாமி பரராசா (செயல்பாட்டாளர்) – பிரான்ஸ், இத்தாலி, நோர்வே, சுவீடன், பின்லாந்து
திரு. செல்லையா குலசேகரம் (செயல்பாட்டாளர்) சுவிட்சர்லாந்து மற்றும் பெனலக்ஸ் நாடுகள்
திரு.ரா. பாஸ்கரன் (செயல்பாட்டாளர்) – ஜெர்மனி
திரு. சிதம்பரப்பிள்ளை (வழக்கறிஞர்) ஐக்கிய இராச்சியம்
திரு. வை. ராஜேஸ்வரன் (பொறியிலாளர்) – அமெரிக்கா
வேட்புமனு தாக்கல் மார்ச் 10ஆம் திகதி தொடங்கும் என தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது.
இறுதித் தேதி அந்தந்த நாட்டின் ஆணையர்கள் ஒவ்வொருவராலும் அறிவிக்கப்படும்.
நான்காவது நாடாளுமன்றத் தேர்தல் மே 5, 2024 அன்று நடைபெறும்.
நா.க.த.அ இன் நான்காவது பாராளுமன்றம் மே 17 – மே 19, 2024 இல் அமெரிக்காவில் கூடும்.
தொடர்பு:
திரு. ரமேஷ் பாலகிருஷ்ணர் [தேர்தல் ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர்] election.commissioner@tgte.org
இணைப்பு:
2013 தேர்தல் கையேடு