நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இந்தியாவில் நடந்த ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுதாபங்களைத் தெரிவிக்கிறது

Link: https://www.einpresswire.com/article/639099898/

NEW YORK, UNITED STATES, June 12, 2023/EINPresswire.com/ —

இந்தியாவின் ஒடிஷாவில் ஜூன் மாதம் இரண்டாம் திகதி மாலையில் இடம்பெற்ற 275 பேருக்கும் மேல்கொல்லப்பட்டதுடன், 1,000க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்த துயரமான ரயில் மோதலில் இந்திய மக்களுக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கமானது தனது இரங்கலைத் தெரிவிக்கிறது.இக்கடினமான நேரத்தில் அவர்களுடன் நாங்களும் பங்கேற்கிறோம்.

ஊடகத் தகவல்களின்படி, முழுவேகத்துடன் வந்த இரண்டு பயணிகள் ரயில், சரக்கு ரயில் ஒன்றுடன் மோதியதில் அனர்த்தம் ஆரம்பித்தது. சமிக்ஞை பிரச்சினைகளே காரணம் என அதிகாரிகள் நம்புகின்றனர்.

காயமடைந்தவர்களின் புனர்வாழ்வுக்கும், உயிரிழந்தவர்களின் உறவினர்களின் வாழ்க்கை வழமைக்குத் திரும்பவும் முழு ஒத்துழைப்பை வழங்குமாறு உலகம் முழுவதுமுள்ள அரசாங்கங்கள், மனிதாபிமான நிறுவனங்களுக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு விடுக்கிறது. மோதிய இரண்டு ரயில்களின் பெரும்பாலான பயணிகள் குடிவரவுப் பணியாளர்கள். இவர்களின் குடும்பங்கள் வழமையான வாழ்விற்கு திரும்புவதற்கு பொருளாதார மற்றும் உளவியல் உதவிகள் அவசியம்.

தெற்காசியாவின் இவ்வாறான பேரனர்த்தங்கள் மனிதனால் ஏற்படுவதும், இயற்கையானதாகவும் அடிக்கடிநிகழ்கிறது. அவற்றைத் தடுப்பதற்கு முற்கூட்டியே திட்டமிட வேண்டிய தேவையொன்று உள்ளது. போக்குவரத்திலோ அல்லது தொழிற்துறையிலோ பாதுகாப்புப் பிரச்சினைகளுக்கு பிராந்தியத்திலுள்ள அனைத்து அரசாங்கங்களும் முன்னுரிமை கொடுக்க வேண்டும். பொதுமக்களும் இவற்றில் பங்கெடுக்கவேண்டும்.

வளக்குறைபாடு காரணமாக பிராந்தியத்தில் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுக்கப்படாததோடு, மனிதஉயிருக்கான மதிப்பும் குறைவாகக் காணப்படுகின்றது. இது தெற்காசிய நாடுகள் அனைத்திலும் மனிதஉரிமைகள் மீறலிலும் பிரதிபலிக்கின்றது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெற்காசியாவிலுள்ள அனைவரின் நலனுக்காகவும் பணியாற்றுவதற்கு உறுதிபூண்டுள்ளதை மீள உறுதிப்படுத்துவதுடன், குறிப்பாக அனைத்து மட்டங்களிலுமுள்ள தனிநபர்களின் உயிர்வாழும் உரிமைக்கும் பெருமதிப்பளிக்கிறது.

TGTE offers condolences and solidarity with victims of India’s tragic train crash https://www.einpresswire.com/article/639071012/tgte-offers-condolences-and-solidarity-with-victims-of-india-s-tragic-train-crash

  • நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் (நா.க.த.அ) பற்றி About Transnational Government of Tamil Eelam (TGTE)

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (நா.க.த.அ) என்பது, ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, உலகெங்கிலும் பல நாடுகளில் வாழும் இலங்கைத் தீவைச் சோந்த பத்து இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்களுக்கான அரசாங்கமாகும்.

2009ஆம் ஆண்டு இலங்கை அரசால் பெருமளவில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நா.க.த.அ. உருவாக்கப்பட்டது. 135 அரசவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக உலகெங்கிலும் வாழும் தமிழர்களிடையே, சர்வதேச கண்காணிப்பாளர்களின் மேற்பார்வையில் நா.க.த.அ, மூன்று தடவை தேர்தல்களை நடாத்தியுள்ளது.

இதன் அரசவையானது, மேலவை (செனற் சபை), பிரதிநிதிகள் அவை என இரண்டு அவைகளையும் மற்றும் அமைச்சரவை ஒன்றையும் கொண்டுள்ளது.

தேசியம், தாயகம் மற்றும் சுயநிர்ணயம் ஆகிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு,அமைதியான ஜனநாயக மற்றும் இராஜதந்திர வழிகளில் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுக்கும் பரப்புரையை நா.க.த.அ முன்னெடுத்துள்ளது. மேலும், அதன் அரசியல் நோக்கங்களை,அமைதியான வழிகளில் மட்டுமே அடைய வேண்டும் எனவும் அதன் அரசியலமைப்பு வலியுறுத்துகிறது.

தமிழ் மக்களுக்கு எதிராகப் போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை புரிந்த குற்றவாளிகளைப் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்த வேண்டும் என்று சர்வதேச சமூகத்திடம் கோருவதுடன், தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்க பொது சன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் நா.க.த.அ. வலியுறுத்துகிறது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதமர் திரு.விசுவநாதன் உருத்ரகுமாரன், நியூயோர்க்கைத் தளமாக்க் கொண்ட ஒரு வழக்கறிஞர் ஆவார்.

Follow us on Twitter: @TGTE_PMO Email: pmo@tgte.org Web: www.tgte-us.org, www.tgte.org Visuvanathan Rudrakumaran Transnational Government of Tamil Eelam (TGTE) +1 614-202-3377 r.thave@tgte.org

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*