செம்மணியில் புதைக்கப்பட்ட குழந்தைகள், பெண்கள் ஆண்கள் அணைவரதும் நீதி கிடைக்கும்வரை தொடந்துபோராடுவோம் அணையா விளக்கில் உறுதியேற்போம்.
JAFFNA, SRI LANKA, June 23, 2025 /EINPresswire.com/ —
செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்ட தமிழர்களின் சர்வதேச நீதி கோரியும், சர்வதேசத்தின் கண்காணிப்புடனான மனிதப் புதைகுழி அகழ்வை வலியுறுத்தியும் மக்கள் செயல் என்கிற தன்னார்வ இளையோர் அமைப்பினால் எதிர்வரும் 23ஆம் திகதி தொடக்கம் 25ஆம் திகதி வரையில் யாழ்/செம்மணி வளைவுப் பகுதியில் மக்கள் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
1995ஆம் ஆண்டிலிருந்து 2025ஆம் ஆண்டு வரையில் செம்மணி பகுதியில் தமிழர்தாயகத்தின் பல்வேறு இடங்களிலும் மனிதப் புதைகுழிகள் அகழப்பட்டுள்ள போதிலும், அது குறித்த மர்மம் இருள் சூழ்ந்ததாகவே காணப்படுகிறது. இனவழிப்பிற்கு ஆதாரமான இந்தக் குற்றச்செயல்களுக்கான காரணமோ, இதற்கு அதிகாரம் வழங்கிய தரப்புக்கள் யார் என்பதோ, மீளவும் இதுபோன்ற மனிப் புதைகுழிகள் உருவாக்கப்படாது என்பதற்கான பொறுப்புக்கூறலோ வெளிப்படுத்தப்படவில்லை. எனவே இருள் சூழ்ந்திருக்கும் செம்மணி மனிதப் புதைகுழியில் உள்ள புதைக்கப்பட்ட தமிழர்களின் நீதி சர்வதேசத்தின், ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் மனச்சசாட்சியை உலுக்கட்டும் .
செம்மணியில் புதைக்கப்பட்ட குழந்தைகள், பெண்கள் ஆண்கள் அணைவரதும் நீதி கிடைக்கும்வரை தொடந்துபோராடுவோம் அணையா விளக்கில் உறுதியேற்போம்.
25ஆம் திகதியாகிய மூன்றாம் நாள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெறும். போராட்டத்தின் இறுதி நாளன்று ஐ.நா மனிதவுரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க்(Volker Türk) யாழ்ப்பாணத்திற்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில் அவரது கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்தப் போராட்டத்தில் பெருமளவில் பொதுமக்கள், மனித உரிமை ஆர்வலர்கள், சிவில் சமூகத்தினர், பல்கலைக்களக மாணவர்கள், மதத்தலைவர்கள், அரசியல் பிரதிநிதிகள் அனைவரையும் அணிதிரண்டு போராடத்தில் கலந்துகொள்ள உரிமையுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கேட்டுக்கோள்கின்றது.