ஊடகச்செய்தி #4 கனடா ஏப்பிரல் 5, 2024
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் – பொதுத் தேர்தல் 2024
நா க த அரசாங்கத்தின் 4வது பாராளுமன்றத்திற்கான அரசவை உறுப்பினர்கள் தேர்தல்- கனடா
வேட்புமனு தாக்கல் பற்றிய முக்கிய திகதிகளில் செய்யப்பட்டிருக்கும் மாற்றங்கள்:
நா.க.த.அ. தேர்தல் ஆணையாளர்(கனடா) வெளியிட்ட ஊடகச்செய்தி ச#1 ல் கொடுக்கப்பட்டிருந்த முக்கிய திகதிகளில் பின் வரும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
பல தரப்பினரிடமிருந்தும் கிடைக்கப்பட்ட ஆலோசனைகளுக்கு அமையவும், வேட்புமனு தாக்கலுக்கு போதிய அவகாசத்தை கொடுக்கும் நோக்கத்திலும், பொதுத் தேர்தல் நாளைக் கருத்தில் எடுத்தும் இம் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
1. தேர்தல் திகதி: மே 5 2024
TGTE Election Day in Canada: May 5th 2024
2. 2024 தேர்தலில் அரசவை உறுப்பினர்களாக போட்டியிடுவதற்கான விண்ணப்பங்களை மார்ச் 20ம்
(Applications for Contestants can be obtained from March 20th 2024) திகதியிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்
3. விண்ணப்பங்கள் ஆணையாளரலால் ஏற்றுக் கொள்ளப்படும் கடைசித் திகதி ஏப்பிரல் 12, 2024.
((Last day for accepting Nomination -Closing Date-is April 12th 2024))
4. விண்ணப்பதாரர் தாமாக போட்டியிலிருத்து விலகிக் கொள்வதற்கான கடைசித் திகதி
(Last date for withdrawing- Cutoff date for withdrawal of Candidacy April 14th 2024) ஏப்பிரல் 14, 2024.
5. தேர்தல் ஆணையாளரால் தகுதியானவை என ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்களின் (போட்டியாளர்களின்) பட்டியல் வெளியிடப்படும் திகதி ஏப்பிரல் 17, 2024. – List of applications accepted by TGTE EC (Canada) as eligible (candidates) will be published on April 17th 2024.
வைப்புத் தொகை பற்றிய விளக்கம் Information on the Non-Refundable deposit:
1. ஏப்பிரல் 14, 2024 வரையான காலப்பகுதியில் தேர்தல் போட்டியிலிருந்து தாமாக விலகிக் கொள்வோருக்கு வைப்புத் தொகை முழுவதும் திருப்பிக் கொடுக்கப்படும்
Deposit will be refunded fully for those withdrew voluntarily until the cut-off date Apr 14th 2024.
2. ஏப்பிரல் 14, 2024 க்கு பின்னர் வைப்புத் தொகை மீளப் பெறமுடியாது.
There will be no refund after the cut-off date Apr 14th 2024.
ஊடக பேச்சாளர்
நா.க.த.அ. 2024 தேர்தல் ஆணையத்தின் (கனடா) ஊடக பேச்சாளராக திரு. பிரதாப் கிட்ணபிள்ளை (1 437 246 9043) நியமிக்கப் பட்டுள்ளார்.
மேலதிக விபரங்களுக்கு எமது முன்னைய ஊடகச்செய்திகள் #1, #2 மற்றும் #3 என்பனவற்றைப் பார்க்கவும்
தேர்தல் ஆணையாளர் (கனடா)
நா க த அரசாங்கம்
437 265 8483 (TGTE)
Be the first to comment