பாரிஸில் (Paris) நடைபெறவுள்ள நாடுகடந்த தமிழீழஅரசாங்கத்தின் நேரடி அரசவை அமர்வு !!!

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் 4 வது தவணைக்காலத்தின்2 வது நேரடி அரசவை அமர்வு நவம்பர் 29, 30 மற்றும் டிசம்பர் 1 ஆகிய திகதிகளில் பாரிஸ் (Paris) புறநகர் பகுதியான Mairiede Le Blanc Mesnil 1 Place Gabriel Péri 93150 Blanc Mesnilநகரசபை மண்டபத்தில் நடைபெற உள்ளது.

இவ் அமர்வு கீழ்வரும் கருப்பொருளில் நடைபெறவுள்ளது

“அநுராவின் ஆட்சியில், தமிழ்த்தேசியத்திற்கான சவாலும்சந்தர்ப்பங்களும்”

“பாதிக்கப்பட்டவர்களால் மேற்கொள்ளப்படும் சர்வதேச நீதி”

நவம்பர் 29, வெள்ளி காலையில் அங்குரார்ப்பண நிகழ்வில்நகரசபை உறுப்பினர்கள், தமிழர் அமைப்புக்களின்பிரதிநிதிகள், பிரெஞ்சு வழக்கறிஞர்கள், வாழ்த்துரைகளையும்,கருத்துக்களையும் வழங்க உள்ளனர்.

வெள்ளி மாலை பிரான்ஸ் நாடாளுமன்றத்தில், பிரெஞ்சுநாடாளுமன்ற பிரதிநிதிகள், பிரெஞ்சு சட்டவாளர்கள், இளம்தமிழ் சட்டவாளர்கள் இவர்களோடு நா.க.த.அரசாங்கத்தின்பிரதமர் வி.ருத்திரகுமாரன் பங்கெடுக்கும் அரங்குகள்,ஆய்வுகள் நடைபெற உள்ளது.

நவம்பர் 30இ சனிக்கிழமை மாலை 18.30 மணிக்கு 5 Rue Roger Le Maner 93270 SEVRANமண்டபத்தில் மக்கள்அரங்க நிகழ்வு நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் பன்னாட்டுஅரசியல், சமூக அமைப்புகளின் பங்களிப்புக்கள்,கலைநிகழ்வுகள் நடைபெறும். இந்நிகழ்வில் தந்தைசெல்வா,நெல்சன் மண்டேலா,மாமனிதர் துரைராஜா, தியாகதீபம் திலிபன் நினைவு விருதுகள்,மற்றும் இளம்தலைமத்துவத்திற்கான விருது என்பன தேர்வாளர்களுக்குவழங்கி கௌரவிக்கப்பட உள்ளன. அத்தோடு இந்நிகழ்வில்தமிழீழ தேசிய உதைபந்தாட்ட அணியினரும்கௌரவிக்கப்படுகின்றனர்.

இந் நிகழ்வுகள் நேரலையாக ஒளிபரப்பாகும்

நேரலை: tgte.tv