Link: https://www.einpresswire.com/article/765912415/
அரசவை அமர்வு, மக்கள் அரங்கம், இராஜதந்திர பட்டறை, கருத்தரங்கம். என நான்கு நிகழ்வுகளை மையப்படுத்தி இடம்பெற்றிருந்த இம்மூன்று நாள் நிகழ்வு
COLOMBO, SRI LANKA, December 4, 2024 /EINPresswire.com/ —
பிரென்சு புரட்சியின் பின்னர் பொதுவாக்கெடுப்பொன்றின் மூலமே எந்தவொரு பிராந்தியத்தினையும் இணைத்துக் கொள்ள முடியும் என பிரான்சின் அரசியல் நிர்ணயசபை எடுத்திருந்த தீர்மானத்தினை சுட்டிக்காட்டி, சுயநிர்ணய உரிமையினையும் பொதுவாக்கெடுப்பையும் உலகிற்கு முதலில் முரசறைந்தது பிரென்சு மண்ணில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் (TGTE) அரசவை அமர்வு நடைபெறுவது பொருத்தமானதாக கருதுகின்றோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தாயகம், தேசியம், அரசியல் இறைமை என்ற தமிழர் தேசத்தின் அரசியல் பெருவிருப்பின் ஜனநாயக வடிவமாக சர்வதேச அரங்கில் இயங்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது தவணைக்காலத்தின் முதலாவது அமர்வு அமெரிக்காவின் நியு யோர்க்கில் இடம்பெற்றிருந்தது. நா.தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது தவணைக்காலத்தின் 2வது நேரடி அரசவை அமர்வு கடந்த நொவெம்பர் 29-30 டிசெம்பர் 1 ஆகிய நாட்கள் இடம்பெற்றிருந்தன.
அரசவை அமர்வு, மக்கள் அரங்கம், இராஜதந்திர பட்டறை, கருத்தரங்கம் என நான்கு நிகழ்வுகளை மையப்படுத்தி இடம்பெற்றிருந்த இம்மூன்று நாள் நிகழ்வுகளிலும் அமெரிக்கா, கனடா, ஒஸ்றேலியா, ஜேர்மனி, சுவிஸ், பிரித்தானியா என புலம்பெயர் நாடுகளில் அரசவை உறுப்பினர்கள் பங்கெடுத்திருந்தனர்.
தொடக் நிகழ்வு :
நா.தமிழீழ அரசாங்கத்தின் துணைப் பிரதமர் மகிந்தன் சிவசுப்ரமணியம் அவர்களது தலைமை உரையுடன் நிகழ்வுகள் தொடங்கியிருந்தன. சிறப்பு அதிதிகளாக பிரென்சு அரசியல் பிரநிதிகள் திரு. அந்தோனி றூசல், திருமதி சுகுர்ணா சிறிநிகணேசன், திரு.பொன்னுத்துரை சிவகுமார் மற்றும் தமிழ் சமூக அரசியல் பிரதிநிதி கனகராஜன் ஆகியோர் வாழ்த்துரைகளை வழங்கியிருந்தனர்.
அமர்வு :
பிரான்ஸ் உறுப்பினரும் அரசவைத் தலைவருமாகிய கலையழகன் கார்திகேசு தலைமையில் அமர்வு இடம்பெற்றிருந்தது. பிரதமர் உரை, உறுப்பினர்கள் அறிமுகம், அமைச்சர்கள் செயற்பாட்டறிக்கை, கேள்வி-பதில்,தீர்மானங்கள் என அரசவை அறநெறிக்கு அமைய அமர்வு இடம்பெற்றிருந்தது.
குறிப்பாக தமிழர் தாயகத்தில் கடும்மழை காரணமாக வெள்ளப் பெருக்கினால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள தாயக உறவுகளுக்கான உடனடி நிவராண உதவிக்கான செயற்திட்டவரை நிறைவேற்றப்பட்டிருந்தது.
பரிசின் புறநகர் பகுதியான புளோன் மெனில் நகர சபை மண்டபத்தில் அமர்வு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடதக்கது.
ஈழத்தமிழரின் இன்றைய அரசியல் நிலைமை தொடர்பிலும் தமது அரசியல் சமூக முன்னெடுப்புகளுக்கு உள்ள தடைகள் தொடர்பாகவும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பிரான்ஸ் நாடாளுமன்ற பிரதிநி கார்லோஸ் மாட்டீன் பிலோங்கோவிற்கு எடுத்துரைத்துள்ளது.
கருத்தமர்வு :
பிரான்சின் நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் இடம்பெற்ற இக்கருத்தமர்வில் ‘சிறிலங்காவின் தற்போதைய நிலைவரம்’ ‘ தமிழர்களின் இனப்பிரச்சனை விவகாரத்தில் பிராங்கோ தமிழ் இளையவர்களின் வகிபாகம்’ ‘ தமிழர்களின் இனச்சிக்கலுக்கான சர்வதேச நீதிப்பொறிமுறை’ ஆகிய கருப்பொருட்களில் உரையாடல் இடம்பெற்றிருந்தது.
இராஜதந்திர பட்டறை :
ஆபிரிக்காவின் புறுக்கினா பசே நாட்டில் இருந்து இந்நிகழ்வுக்கென பிரத்தியேகமாக வருகை தந்திருந்த விரிவுரையாளர் பொல் அவர்கள் இராஜீக வழிச்செயற்பாட்டு முறைமைகள் குறித்து பட்டறையினை நடாத்தியிருந்தார்.
மக்கள் அரங்கம் :
பரிசின் புறநகர் பகுதியான செவ்ரோன் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றிருந்த இந்நிகழ்வில் துறைசார் இளையோர்களுக்கான மாண்பேற்றம் நிகழ்வும், தமிழீழ உதைபந்தாட்ட அணிக்கான மதிப்பளித்தல் நிகழ்வும் பிரதானமாக இடம்பெற்றிருந்தன.
Visuvanathan Rudrakumaran Transnational Government of Tamil Eelam (TGTE) +1 614-202-3377 email us here Visit us on social media: Facebook X Instagram