நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிமுகப்படுத்தும் TGTE TV அங்குரார்ப்பணம் – 22.07.2018

tgte-logo5
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிமுகப்படுத்தும் TGTE TV அங்குரார்ப்பணம் – 22.07.2018

உலகப்பரப்பெங்கும் பரந்து வாழுகின்ற மக்களை ஒரே அணியாக்கி தேசியம் நோக்கி பயணிக்கின்ற செயற்பாடுகளை ஐநா வரை தமிழர் தரப்பால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் தாயகம், தேசியம், தன்னாட்சியுரிமை எனும் தொனிப்பொருளுடன் இயங்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தேசிய விடுதலை தொடர்பான செயற்பாடுகளை உலகம் எங்கும் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லவும் மக்கள் மத்தியில் தேசிய விடுதலை தொடர்பான விழிப்புணர்வை உருவாக்கி தேசிய விடுதலைக்கு வலுச் சேர்க்கும் முகமாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தால் புதியதோர் முயற்சியாக ஊடகம் மற்றும் பொதுசன விவகாரங்களுக்கான அமைச்சினால் TGTE TV அறிமுகப்படுத்தப்படுகின்றது.

காலம் : 22.07.2018, ஞாயிற்றுக்கிழமை

நேரம் : மாலை 16:00 தொடக்கம் 19:00 வரை

இடம் : Harrow Civic Centre, 2nd Floor, Station Road, Harrow, HA1 2XY

Buses : 140,186,182 Nearest underground : Harrow & Wealdtone Free car park available.

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

இணையம் மூலமாக பார்வையிட : http://www.tgte.tv/

Promo video : https://youtu.be/pzGnGQxavsM

இன்றைய நிகழ்வின் நேரடி ஒளிபரப்பு இணையத்தின் ஊடாக ஒளிபரப்பப்படும். http://www.tgte.tv/live-broadcast/

ஊடகம் மற்றும் பொதுசன விவகாரங்களுக்கான அமைச்சு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*