நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் “உலக மனித உரிமை நாளான மார்கழி 10, 2017” ….

tgte-hr2
   
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் “உலக மனித உரிமை நாளான மார்கழி 10, 2017” நடாத்தப்பட்ட “தமிழர்களுக்கான மனித உரிமை மாநாடு”
tgte-hrd1

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் “உலக மனித உரிமை நாளான மார்கழி 10, 2017” நடாத்தப்பட்ட “தமிழர்களுக்கான மனித உரிமை மாநாடு”

இம் மாநாடு Wembley International Hotel, Empire Way, Wembley, Middlesex, HA9 0NH ல், மார்கழி 10, 2017, காலை 9 மணி முதல் இரவு 8 மணிவரை நடை பெற்றது.

தலை சிறந்த அறிவாளிகளை உள்ளடக்கி எம் இனத்துக்கு நடந்த இனப்படுகொலையை இவ்உலகுக்கு எடுத்துக்காட்டவும், காணி அபகரிப்பு, இரகசிய சித்திரைவதை முகாம், அரசியல் கைதிகள் விவகாரம் என்று பல விடயங்களை உள்ளடக்கிய கருத்தரங்கும், விழிப்புணர்வுகள் நடைபெற்றது.

இந்த மாநாட்டில் பெராசிரியர் சொர்னராஜ் அவர்கள் ஏன் இந்த மனித உரிமை நாளை நாங்கள் உலகிற்கு எடுத்துரைக்க வேண்டும் என்றும், எம் இனத்திற்கு எதிராக நடாத்தப்பட்ட மற்றும் நடாத்தப்பட்டுக் கொண்டுருக்கும் இனப்படுகொலைக்கான நீதியை எப்படி வென்றெடுத்தல், எப்படி இலங்கையை உலக குற்றவியல் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லலாம் என்பன பற்றி எடுத்துக் கூறினார்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் உருத்திரக்குமார் அவர்கள் எப்படியான வேலைப்பாட்டை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் செய்து வருகிறது என்பதை கச்சிதமாக எடுத்துரைத்தார், முக்கியமாக தமிழ் மக்களின் அடிப்படை மனித உரிமைக்கு எதிராக பாவிக்கப்படும் 6ம் திருத்தச் சட்டத்தை இலங்கையில் இல்லாமல் ஒழிக்க வேண்டும் என்பதற்காக 1,705 சட்டத்தரனிகளின் கையொப்பம் இட்ட பத்திரத்தை ஐக்கிய நாடுகள் சபைக்கு, மனித உரிமை தினமாகிய மார்கழி 10, 2017 அன்று அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவித்தார் அத்துடன் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பல முக்கிய செயற்பாட்டுகளையும் எடுத்துரைத்தார்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் திரு. மாணிக்கவாசகர், செல்வி. அம்பிகை சீவரடணம் Director of International Centre for Prevention and Prosecution of Genocide (ICPPG), மற்றும் அங்கு கருத்துத் தெருவித்த தேசிய தமிழ் மன்னன், செல்வி அங்கயற்கன்னி, திரு.ராஜன் போன்றவர்கள் தாயகத்தில் எமது மாவீரர் குடும்பங்கள், முன்னால் போராளிகள், தமிழ் மக்கள் படும் இன்னல்கள்களை எடுத்துரைத்தார்கள்.

தமிழர்களின் தோழமை மையமான (Tamil Solidarity)ல் இருந்து திரு.சேனன் அவர்கள் எவ்விதத்தில் எமது தாயக நிலங்கள் சூறையாடப்பட்டுகின்றன என்பதனையும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டும் மற்றும் சமூக நலத்தின் பிரதி அமைச்சர் திரு. சொ. யோகலிங்கம் அவர்கள் எப்படியாக இலங்கை அரசாங்கம் உலக நாடுகளை ஏமாத்தி தம்வசம் எடுக்கின்றனர் என்பதனையும் அதற்கு உலகெங்கம் பரந்து வாழும் தமிழ் மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதனை எடுத்துக் கூறினார்.

இங்கு முக்கியமாக வேற்று நாட்டவரும் வருகைதந்து தமக்கு நடக்கும் மனித உரிமை மீறல்கள் பற்றி விளக்கினார்கள் குறிப்பாக “Nation Without States” ல் இருந்து Clr. Graham Williams, Ms. Doris Jhones, Mr.Thambani and many others அத்துடன் பல லண்டன்வாழ் பொது மக்களும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செய்யபாட்டார்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இங்கு புத்தரின் பெயரால் (in the name of Buddha film), எம்மக்களுக்கு நடந்த இனப்படுகொலையை சித்தரிக்கும் திரைப்படம் online ல் www.tecgtheater.com முகவரியில் பார்க்கும் படியும் உங்கள் உற்றார், உறவினர், நன்பர்களை பார்வையிட வைக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

இன் நிகள்வை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகளும் தொகையான கொடுரங்கள் இனஅழிப்புக் கெதிரான செயற்பாடுகளுக்கான அமைச்சர் திரு. மணிவண்ணன் அவர்கள் நடத்தியிருந்தார்,

அவருக்கு உறுதுணையாக மாவீரர் முன்னைநாள் போராளிகள் குடும்ப நலம் பேணல் அமைச்சின் ஜக்கிய இராட்சியத்தின் பிரதிநிதி திரு. நிமலன், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டும் மற்றும் சமூக நலத்தின் பிரதி அமைச்சர் திரு. யோகலிங்கம், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டாளர்கள் திரு.குஜியந்தன், செல்வி.சோபனா, திரு.சிவகாந்தன் வழங்கியிருந்தனர்.

இன் நிகள்வு உறுதிமோழி எடுத்து தமிழரின் தரக மந்திரமான “தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்” கூறி முடிவு பெற்றது.

“Tamil’s Human Rights Conference on the World Human Rights Day 2017 by TGTE (UK)”

Transnational Government of Tamil Eelam (UK) held a Tamil’s Human Rights Conference on the “World Human Rights Day” of December 10, 2017.

To expose the ongoing genocide, enforced disappearance, torture camps, political prisoners, Tamil’s lands been invaded by Sri Lanka forces and many more topics were discussed and debated at the conference.

The conference was addressed by TGTE Prime Minister Hon. Visvanathan Rudrakumar on TGTE activities and specially on this human rights day (10/12/2017), we handed over 1,705 solicitor signatures to the UN to demand the abolition of Sri Lanka”s 6th Amendment which give no freedom of expression by Tamils in Sri Lanka.

Forign Affairs Minister Manikavasakar talked about the current political situation in Sri Lanka, Prof. Sornaraj talked about the what is the road map to achive the justice, peace and permanent solution for our people.

Miss. Ambihai Sivaratnam (ICPPG) talked about importance of collecting evidence to submit to UNHRC, Miss. Ankajakkanni, Mr.Thesiyath Thamil Mannan and Mr. Rajan talked about crises faced by post war victims and political Prisoners.

Deputy Minister of Sports and Community Health Mr. Sockalingam Yogalingam talked about how cunningly Sri Lankan Government hoodwink the world and UN and what the diaspora need to do.

Welfare of families of Martyrs and former Cadres UK country coordinator Mr. Nimalan Seevaratnam talked about the need to expose the Sri Lankan Government speacilly by the film “in the name of buddha” how our people were genocide and urge everyone to watch the film online at www.tecgtheater.com

Also the event was addressed by human rights activist Clr. Graham Williamson (Executive member of National Liberal Party (NLP) & Nations without States), Ms. Doris Jhones (Founder of Saba & Sarawak and NwS) and Mr.Thambani (Matabilan activist).

The event was coordinated by Human Rights and Action against Mass atrocities and Genocide Minister Mr. Pathmanaban Manivannan and TGTE Volunteers Mr. Kujijanthan, Miss. Shobana and Mr.Sivakanthan.

Event was held at place : Wembley International Hotel Empire Way, Wembley, Middlesex, HA9 ONH Date : 10 December 2017 Time : 9.00 AM – 8 PM

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*