போராடி மடிந்த மாவீரர்கள் விட்டுச் சென்ற வழித்தடங்கள் இலக்கை வெளிப்படுத்தியுள்ளது: பிரதமர் உருத்திரகுமாரன்போராடி மடிந்த மாவீரர்கள் விட்டுச் சென்ற வழித்தடங்கள் இலக்கை வெளிப்படுத்தியுள்ளது: பிரதமர் உருத்திரகுமாரன் “தமிழீழ மக்கள் சிங்கள அழிப்புக்குள்ளாகாமல் பாதுகாப்பாக வாழ முடியும் என்ற தொலை நோக்கில் மாவீரர்கள் களமாடினார்கள்” NEW YORK, USA, November 30, 2018 /EINPresswire.com/ — தனி தமிழீழ அரசு ஒன்றே தமிழீழ மக்களின் தேசிய பிரச்சனைக்கு தீர்வு என உறுதி கொண்டு எம் வீரர்கள் போராடினார்கள் என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வீ . உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் உரிமைகளுக்காக ஆயுதம் ஏந்தி போராடி உயிர்நீத்த போராளிகளை நினைவுகூறும் மாவீரர் தினம் தமிழர் தாயகம் மற்றும் புலம்பெயர் தேசமெங்கும் நேற்று உணர்வுபூர்வமாக அனுஷ்ட்டிக்கப்பட்டது. அந்தவகையில், நியூ யோர்கில் நேற்று இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருது வெளியிட்டுள்ள அவர். தமிழீழ மக்கள் சிங்கள அழிப்புக்குள்ளாகாமல் பாதுகாப்பாக வாழ முடியும் என்ற தொலை நோக்கில் மாவீரர்கள் களமாடினார்கள். இன்று மாவீரர்கள் விட்டுச் சென்ற வழித்தடங்கள் நாம் சென்றடைய வேண்டிய இலக்கை வெளிப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இறுதியுத்தத்தில் முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் பின்னர் அனுஷ்டிக்கப்பட்டு வரும் மாவீரர் நிகழ்வை அழித்து ஒழித்துவிட சிங்கள அரசு பாரிய முயற்சி மேற்கொண்டு வந்தது. சிங்களவர் மட்டும் அல்ல அனைத்துலக சமூகத்தின் ஒரு பகுதியினரும் அதற்கு முயற்சி செய்துள்ளனர் என்றும் பிரதமர் வீ. உருத்திரகுமாரன் சுட்டிக்காட்டியுள்ளார். |