நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் புலம்பெயர் தேசங்களில் திறமையாகச் செயற்படுகின்றது! கருத்துக்கணிப்பு தெரிவிப்பு!!

Screen Shot 2019-01-18 at 10.01.54 AM
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் புலம்பெயர் தேசங்களில் திறமையாகச் செயற்படுகின்றது! கருத்துக்கணிப்பு தெரிவிப்பு!!
புலம்பெயர் தளங்களில் ஒப்பீட்டளவில் திறமையாகச் செயற்படுகின்ற அமைப்பு எது என்று IBC தமிழ் இணையத்தளத்தில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளன.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, கனேடிய தமிழ் காங்கிரஸ், பிரித்தானிய தமிழர் பேரவை, போராளிகள் கட்டமைப்பு, உலகத் தமிழர் முன்னணி போன்ற அமைப்புக்களின் பெயர்கள் இந்த கருத்துக்கணிப்பில் முன்வைக்கப்பட்டன.

இதில், 61.52 வீதமான வாக்குகள்(4107 வாக்குகள்) பெற்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னிலை வகித்துள்ளது.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு 347 வாக்குகளையும், கனேடிய தமிழ் காங்கிரஸ் 212 வாக்குகளையும் , பிரித்தானிய தமிழர் பேரவை 194 வாக்குகளையும் , போராளிகள் கட்டமைப்பு, 188 வாக்குகளையும். உலகத் தமிழர் முன்னணி 85 வாக்குகளையும் பெற்றுள்ளன.

இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், கருத்துக்கணிப்பில் கலந்துகொண்ட 23 சதவீதமானவர்கள் எந்த அமைப்புக்களும் புலம்பெயர் மன்னில் சரியாகச் செயற்படவில்லை என்று வாக்களித்துள்ளார்கள்.

புலம்பெயர் மண்ணில் தமிழ் அமைப்புக்களின் செயற்பாடுகள் பற்றி தமிழ் மக்களின் அதிருப்தியின் ஒரு வடிவமாக இந்தக் கருத்துக்கணிப்பை உள்வாங்கி, அமைப்புக்கள் தமது செயற்பாடுகளை மீள ஒருங்கமைக்க வேண்டும் என்ற ஆலோசனையை முன்வைக்கின்றது ஐ.பீ.சி. தமிழ் கருத்துக்கணிப்புக் குழு

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*