விறுவிறுப்புடன் தொடங்கியது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வாக்களிப்பு !

Link: https://www.einnews.com/pr_news/483471576/

விறுவிறுப்புடன் தொடங்கியது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வாக்களிப்பு !

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது தவணைக்காலத்துக்கான தேர்தல் வாக்களிப்பு இடம்பெற்று வருகின்றது.

ஒவ்வொரு தவணைக்காலமும் ஜனநாயகப் பொறிமுறையாக தேர்தல் அறிவிக்கப்பட்டு, அதன் மூலம் தேர்வு செய்யப்படுகின்ற ஓர் தனித்த அமைப்பாக இது அமைந்து வரும் நிலையில், மூன்றாவது தவணைக்கான தேர்தல் இடம்பெருகின்றது.”— நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஆணையம் LONDON, UNITED KINGDOM, April 27, 2019 /EINPresswire.com/ —

2009ம் ஆண்டு தமிழர் தேசம் சிங்கள அரசினால் ஆக்கரிமிக்கபட்டு தமிழர்களுக்கான அரசியல் வெளி இல்லாத நிலையில், இலங்கைத்தீவுக்கு வெளியே அனைத்துலக அரசியல் வெளியில் உருவாகியதுதான் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்.

நாடுகடந்த அரசியல் என்ற புதியதொரு அனைத்துலக அரசியல் பரிமாணத்தில் தோற்றம் பெற்ற இந்த அரசாங்கமானது அரசவை, மேலவை, பிரதமர், அமைச்சரவை என்ற கட்டமைப்புக்களைக் கொண்டதாக இருக்கின்றது.

ஒவ்வொரு தவணைக்காலமும் ஜனநாயகப் பொறிமுறையாக தேர்தல் அறிவிக்கப்பட்டு, அதன் மூலம் தேர்வு செய்யப்படுகின்ற ஓர் தனித்த அமைப்பாக இது அமைந்து வரும் நிலையில், இதனுடைய மூன்றாவது தவணைக்காலத்துக்கான தேர்தல் ஏப்ரல் 27ம் நாள் சனிக்கிழமை இடம்பெற்று வருகின்றது.

இதேர்தலில் பிரித்தானியாவில் பல வேட்பாளர்கள் ஆர்வத்தோடு களமிறங்கியுள்ள நிலையில், வாக்கெடுப்பின் மூலம் தேர்வு அரசவைப்பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர்.

தபால் மூலம் வாக்களிப்பு இடம்பெற்றிருந்த நிலையில்;, தற்போடு நேரடி வாக்களிப்பு இடம்பெற்று வருகின்றது.

லண்டனில், லண்டனுக்கு வெளியேயும் வாக்களிப்பு நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் பெயர் பட்டியலில் மூன்று பிரிவுகளாக வேட்பாளர்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்

இளையோர் இலக்கம் : 101 – 108

பெண்கள் இலக்கம்201 : 203

ஏனையோர்கள் இலக்கம் : 301 – 320

தேர்தலில் பிரித்தானியாவில் இருக்கும் அனைவரும் தொகுதிவாரியாக இல்லாமல் மூன்று விருப்பு வாக்குகளை செலுத்தலாம். ஒரு பிரிவில் இருந்து ஒருவரை மட்டுமே தெரிவு செய்யலாம். ஒன்றுக்கு மேற்பட்ட விருப்பு வாக்குகள் ஒரு பிரிவில் வழங்கப்படுமாயின் அவ்வாக்கு செல்லுபடியற்ற வாக்காக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

TGTE to Hold Elections Tomorrow to Elect New Members of Parliament – International Election Observers to Monitor! https://world.einnews.com/pr_news/483404796/tgte-to-hold-elections-tomorrow-to-elect-new-members-of-parliament-international-election-observers-to-monitor

Web: www.tgte.org

Web: www.tgte-us.org Transnational Government of Tamil Eelam TGTE +44 20 8016 0797

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*