முள்ளிவாய்க்கால் தமிழினவழிப்பு நினைவு நிலையங்களை அமைப்போம் : பிரதமர் வி.உருத்திரகுமாரன் !

தமிழீழதேசம் முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் நினைவுகளைத் தன்னுள் இருத்தி, சிங்கள அரசின் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும் என்பது காலத்தின் நியதி என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் மே-18 தமிழீழத் தேசிய துக்க நாள் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை முள்ளிவாய்க்கால் தமிழினவழிப்பு நினைவு நிலையங்களை உலகெங்கும் அமைப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.

பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது அறிக்கையின் முழுவிபரம் :

இன்று தமிழீழத் தேசிய துக்க நாள்.

சிறிலங்கா அரசின் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் நினைவு நாள்.

நாகரீக உலகம் வெட்கித் தலைகுனியும் வகையில் தமிழ் மக்கள் மீது சிங்கள அரச படைகள் நிகழ்த்திய கொடுமைகளை உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் நினைவுகூரும் நாள்.

சிங்கள அரசின் முள்ளிவாயக்கால் தமிழன அழிப்புத் தற்செயலாக நிகழ்ந்ததொரு நிகழ்வல்ல. எதிரப்பாராமல் நிகழ்ந்ததொன்றுமல்ல. அது சிறிலங்கா இராணுவத்தின் அத்துமீறலின் விளைவும் அல்ல.

மாறாக இது தமிழ் மக்களின் சுதந்திர வேட்கையினைக் கருவறுக்க சிறிலங்கா அரசு திட்டமிட்டுப் புரிந்தவொரு வெறியாட்டே முள்ளிவாய்க்கால் இனவுழிப்பு.

முள்ளிவாய்க்கால் என்றதொரு சிறு கிராமத்தின் பெயர் தமிழ் மக்களின் மீதான இனவழிப்பின் குறியீடாக இப்போது வரலாற்றில் பதிவாகியிருக்கிறது.

இம் முள்ளிவாய்க்கால் தமிழனவழிப்பின் 10வது ஆண்டு நினைவை நாம் தற்போது நினைவு கூருகிறோம்.

இப் பத்தாண்டுகளில் நாம் எவற்றைச் சாதித்திருக்கிறோம் என்ற கேள்வி எம்மில் பலருக்கும் எழுவதனையும் காண முடிகிறது.

பத்தாண்டுகள் கடந்தும் நாம் எமது உரிமைளை வென்றெடுக்கும் போராட்டத்தில் பெரிதும் முன்னேறவில்லையே என்ற ஏக்கக் குரல் பலர் மத்தியில் எழுவதையும் நாம் அவதானிக்க முடிகிறது.

நாம் இந்த இடத்தில்; சிறிலங்கா அரசு மேற்கொண்ட முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் உள்நோக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழினவழிப்பின் ஊடாக சிங்கள அரசு அடைந்து கொள்ள முயன்ற விடயங்களை அடைந்து கொள்ள முடிந்ததா என்பதனையும் நாம் கவனத்திற் கொள்ள வேண்டும்.

முள்ளிவாய்க்கால் தமிழினவுழிப்பு மூலம் தமிழ் மக்களின் சுதந்திர வேட்கையினை நசுக்கி விட சிறிலங்கா அரசு முயன்றது.

சிறிலங்கா அரசின் கொள்கையான ‘ஒரு நாடு ஒரு மக்கள்’ என்ற நிலைப்பாட்டை நடைமுறையில் அமுல்;படுத்தலாம் என்று எண்ணியது. சிங்கள அரசின் நிலைப்பாடுகளையும் விருப்பங்களையும் இயல்பாக ஏற்று அதற்கு அடிபணிந்து தமிழ் மக்கள் வாழும் நிலையை ஏற்படுத்த முடியும் என்று எண்ணியது. இவ்வாறான நிலையை உருவாக்குவதன் மூலம் தமிழ் மக்களை நிரந்திரமாகத் தோற்கடித்து விடலாம் என்று சிந்தித்தது. தமிழீழழ் என்ற தனியரசு என்ற எண்ணக்கருவை அழித்துச் சிதைத்து விடலாம் என்று எண்ணியது.

ஆனால் பத்தாண்டுகள் கழிந்தும் தான் விரும்பியவற்ழற சிறிலங்கா அரசால் அடைந்து கொள்ள முடியவில்ல. தமிழ் மக்களைத் தோற்கடிக்கப்பட மக்களாக மாற்ற முடியவில்லை.

தமிழ் மக்களின் சுதந்தர உணர்வை சிறிலங்கா அரசால் நசுக்கி விட முடியவில்லை. தமிழ் மக்கள் தமது உரிமைக்காக தாயகத்திலும் அனைத்துலகிலும் குரல் கொடுப்பதைத் தடுத்து விட முடியவில்லை.

சிறிலங்கா அரசின் தமிழின அழிப்புக்கு விடுதலைப்புலிகளை அழித்தல் என்ற தமது நலன் சார்ந்த நோக்கத்துடன் பலமிக்க அனைத்துலக அரசுகள் பல அங்கீகாரம்; வழங்கின. புலிகள் அமைப்பு உருவாக்கிய புதிய வலுச்சமநிலை தமது நலன்களை அடைந்து கொள்வதற்கு இடையூறானது என்று இந்த அரசுகள் சிந்தித்தமையே இதற்குக் காரணம். தமது நலன்களை அடைந்து கொள்வதற்கு பெரும் இனவழிப்பை சிறிலங்கா அரசு நடத்த சம்மதம் வழங்கிய அரசுகள் யாவும் வரலாற்றின் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவையே.

காலம் எல்லாவிதக் காயங்களையும் ஆற்றவதுபோல தமிழ் மக்களின் துயரையும் கோபத்தையும் ஆற்றி அவர்களை நீதிகோரும் முயற்சியில் இருந்து பின்வாங்க வைத்து விடும் என தமிழின அழிப்பைப் புரிந்தவர்களும் அவர்களுக்குத் துணைபோனவர்களும் எண்ணியிருக்கக்கூடும். ஆனால் முள்ளவாயக்கால் தமிழினவழிப்பு நிகழ்நது 10 ஆண்டுகளாகியும் தமிழ் மக்கள் தமது நீதி கோரும் இலக்கினைக் கைவிட்டு விடவில்லை.

தமிழின அழிப்புக்காக சிறிலங்கா அரசினைக் குற்றிவாளிக்கூண்டில் ஏற்றும் தமிழ் மக்களின் முயற்சி அனைத்துலகக் கவனத்தை ஈரத்திருந்தாலும் அனைத்துலக அரசுகளின் அங்கீகாரத்தை இதுவரை பெறவில்லை. இனவழிப்பு நிகழ்ந்தது என்பததனை அரசுகளை ஏற்றுக் கொள்ள வைப்பது இலகுவானதொரு விடயமல்ல. இவ் அங்கீகாரம் தரக்கூடிய அரசியல் விளைவுகளே இதற்குப் பிரதான காரணம். தமிழ் மக்கள் இவ் விடயத்தில் எந்தவிதமான விட்டுக் கொடுப்புமின்றிப் போராடுதல் மிக அடிப்படையானது.

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்புக்கு நீதி கோரும் போராட்டத்தை தமிழ் மக்கள் ஏற்கனவே இருக்கும் அனைத்துலக அரங்குகளில் கடந்த 10 ஆண்டுகளாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். அவ்வரங்குகள் பலவற்றில் முடிவுகளை எடுக்கும் அதிகாரங்கள் நாடுகளின் வசமே இருப்பதால், அரசற்ற தமிழ்மக்கள் அங்கு நீதியினைப் பெறுவது இலகுவானதொரு விடயமாக இருக்கப்போவதில்லை என்பது புரிகின்றது. எனவே நீதிக்கான எமது போராட்டத்திற்காக புதிய போர்க்களங்களை உருவாக்குவது அத்தியாவசியமானதாகும்.

முள்ளிவாய்க்கால் தமிழனவழிப்பின் நெருப்பு அணையாது தலைமுறை தலைமுiறாயாகப் பேணிப் பாதுகாக்கப்படவேண்டும். இனவழிப்பு நினைவுகளைச் சுமந்திருக்கும் மக்களே தமது விடுதலையையும் அவாவி நிற்பாhர்கள். இதனால் முள்ளிவாய்கால் நினைவுகளுடன் அறிவுத்தளத்தில் செயற்படக்கூடிய முள்ளிவாயக்கால் தமிழினவழிப்பு நினைவு நிலையங்களை பல்வேறு நாடுகளிலும் அமைக்கும் திட்டத்தை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

முள்ளிவாய்க்கால் தமிழினவழிப்பில் கொல்லப்பட்ட அனைவருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தலைதாழ்த்தி வணக்கம் செலுத்துகிறது. தமிழீழதேசம் என்றும் இந்நினைவுகளைத் தன்னுள் இருத்தித் சிங்கள அரசின் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும் என்பது காலத்தின் நியதி என பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தனது தமிழீழத் தேசிய துக்க நாள் செய்தியில் தெரிவித்துள்ளார்.

The Secretariat, TGTE

join us : Website: http://tgte.org/tamil Facebook: https://www.facebook.com/TGTE.Secretariat/ Twitter: @suginthan Twitter: @TGTE_SEC G+: https://plus.google.com/u/0/+TGTESecretariat

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*