விடுதலைப் புலிகள் அச்சுறுத்தல் என்பதில் உண்மையில்லை – உருத்திரகுமாரன் கோரிக்கை !

விடுதலைப் புலிகள் அச்சுறுத்தல் என்பதில் உண்மையில்லை – உருத்திரகுமாரன் கோரிக்கை !

Link: https://malaysiaindru.my/179671

1மலேசியாவில் நெகிரி செம்பிலான், மலக்கா மாநிலச் சட்டப்பேரவைகளின் உறுப்பினர்களான ஜி.சுவாமிநாதன், பி.குணசேகரன் உட்பட ஜனநாயகச் செயல் கட்சி (DAP) இரு உறுப்பினர்களுடன் மொத்தம் 12 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கண்டித்துள்ளது.

சொஸ்மா எனும் தேச பாதுகாப்பு சிறப்புச் சட்டப் பிரிவின் கீழ் விடுதலைப் புலிகள் அச்சுறுத்தல் எனும் குற்றஞ்சாட்டின் பெயரில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், 2009 மே மாதத்தில் ஆயுதங்களை மௌனித்து விட்டதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருந்துள்ளனர்என்கிறார்.

மேலும், தமிழிழீழ விடுதலைப் புலிகளினால் எவ்வித வன்முறை நிகழ்வுகளும் நடைபெறவில்லை என்றும் இதனை 2018 செப்டெம்பர் 19ல் வெளிவந்திருந்த அமெரிக்காவின் வெளியுறவுத்துறையின் அறிக்கையும் உறுதிப்படுத்தியுள்ளது என்கிறார். மேலும்,

“ஆயுதப்போர் கைவிடப்பட்ட பிறகு தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்களால், வன்செயல் எதுவும் நிகழவில்லை என்பது பலவல்லுனர்களது கருத்தாக உள்ளது.”

“மலேசியாவின் நலன்களுக்கு எதிராகவோ, மலேசியாவில் வன்முறை சம்பவங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் எக்காலத்திலும் ஈடுபட்டதில்லை. மலேசிய நலன்கள் எதையும் இலக்காகக் கொண்டு தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டதும் இல்லை.” என்கிறார் அமெரிகாவாவின் நியூயொர்க் நகரில் தனது அலுவலகத்தை கொண்டுள்ள உருத்திரகுமாரன்

மேலும் அவர் தனது அறிக்கையில், இன அரசியல் பார்வைகளால் இந்தக் கைதுகள் நடந்திருப்பதாகவும் சில ஊடகச் செய்திகள் சுட்டிக் காட்டுகின்றனஎன்றும், இனவாத அரசியலுக்கும் கட்சிசார் அரசியலுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரைப் பயன்படுத்த வேண்டாம் என மலேசிய அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

தங்களுக்கு மாண்பைச் சேர்த்த ஓர் பேரியக்கமாக தமிழீழ விடுதலைப் புலிகளைத் உலகெங்கும் வாழும் தமிழர்கள் பார்க்கின்றார்கள். இன்றளவும் ஆண்டுதோறும் நவம்பர் 27ஆம் நாள் உலகெங்கும் வாழும் தமிழர்கள் மாவீரர் நாள் கொண்டாடக் கூடுகின்றார்கள் என்றார்.

அதோடு புதிய மலேசியாவை உருவாக்குவோம் என்று ஆட்சிக்கு வந்த புதிய அரசாங்கம், ஒடுக்கப்பட்ட அடக்கப்பட்ட இனங்களுக்கு குரல் கொடுக்கும் ஒரு தேசமாக, புதிய தொரு மலேசியாவை உருவாக்க வேண்டுகிறோம் என்கிறார்.

இந்நிலையில் விடுதலைப் புலிகள் அச்சுறுத்தல் என்ற பெயரில் குற்றஞ்சாட்டப் பட்டு கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுவதோடு, அனைத்துக் குற்றச்சாட்டுக்களிலிருந்தும் அவர்களை விடுவிக்கும்படியும், காவல்துறையிடம் சான்று இருக்குமானால், கைது செய்யப்பட்டவர்கள் மீது தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டார்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*