ஐ.நாவின் கவனத்தில் மாவீரர் நாளுக்கான தடை : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுப்பு !

https://www.einpresswire.com/article/531477710/

ஐ.நாவின் கவனத்தில் மாவீரர் நாளுக்கான தடை : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுப்பு ! NEWS PROVIDED BY Transnational Government of Tamil Eelam, TGTE November 25, 2020, 16:12 GMT SHARE THIS ARTICLE

United Nations

போரில் இறந்தவர்களுக்கு மரியாதை செய்வது என்பது சர்வதேச மனிதவுரிமைச் சட்டங்களின் படி, குறிப்பாக மானிட கண்ணியத்துக்கான உரிமையின் படி பாதுகாக்கப்பட்டுள்ளது

தியாகி திலீபனினின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு சிறிலங்கா விதித்த தடை தொடர்பிலும், சிறிலங்கா கடுமையான எதிர்வினையை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு எதிராக வெளிப்படுத்தியிருந்தது ”— Transnational Government of Tamil Eelam (TGTE)VANNI, SRI LANKA, November 25, 2020 /EINPresswire.com/ —

மாவீரர்நாளுக்கு சிறிலங்கா அரச கட்டமைப்புக்கள் விதித்துள்ள தடைகளை தொடர்பில் ஐ.நாவின் இரண்டு சிறப்பு அறிக்கையாளர்களின் கவனத்துக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கொண்டு சென்றுள்ளது.

ஒன்றுகூடும் சுதந்திரத்துக்கான சிறப்பு அறிக்கையாளர், கருத்துச் சுதந்திரத்துக்கான சிறப்பு அறிக்கையாளர்களின் கவனத்துக்கு சர்வதேச மனித உரிமைகள்,சட்டங்களுக்கான வல்லுனர்கள் Global Diligence LLP filed மையத்தின் ஊடாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இந்த நடவடிக்கையினை எடுத்துள்ளது.

முன்னராக தியாகி லெப்.கேணல் திலீபனினின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு சிறிலங்கா அரச கட்டமைப்புக்கள் விதித்த தடை தொடர்பிலும், இவ்வாறான முறைப்பாட்டை ஐ.நாவின் இவ்விரு சிறப்பு அறிக்கையாளர்களின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டிருந்ததோடு, இது தொடர்பில் சிறிலங்கா அரசு தனது கடுமையான எதிர்வினையை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு எதிராக வெளிப்படுத்தியிருந்தது.

இந்நிலையில் அதன் தொடர்சியாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், மாவீரர் நாளுக்கு விதிக்கப்பட்டு வரும் தடைகள் தொடர்பில் ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர்களுக்கு மேற்கொண்ட முறையீட்டில், இலங்கைத்தீவில் சிங்கள பௌத்த பேரினவாத ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவே தமிழர்கள் ஆயுத வழியிலும், அமைதி வழியிலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். ‘மாவீர்ர் நாள்’ என்பது இத்தகைய அரச பயங்கரவாத அடக்குமுறையை எதிர்த்துப் போராடி உயிர்நீத்தவர்களை நினைவேந்துவதற்காக நடத்தப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் களப்பலியான மாவீரன் லெப்டினண்ட் சங்கர் உயிர்நீத்த நாளே மாவீரர் நாளாக ஆண்டுதோறும் தமிழ்மக்களால் நினைவேந்தப்படுகின்றது.

தமிழ்மக்களின் மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு தடைகளை விதிப்பதும், அச்சுறுத்துவதும் ஐ.நாவினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட சர்வதேச குடியியல் அரசியல் உரிமைகள் பற்றிய பன்னாட்டு ஒப்பந்தத்தின் முறையே உறுப்பு 21 மற்றும் 19ல் உத்தரவாதம் செய்யப்பட்டுள்ள ஒன்றுகூடும் உரிமையையும் பேச்சுரிமையையும் மீறுவதாகும் என்று முறையீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் பயங்கரவாத பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகளை இட்டிருப்பதானது, நினைவேந்தும் செயல்கள் உறுப்பு 21இன் கீழ் சொல்லப்படும் கட்டுத்தளைகளுக்கு இடம்தரா விட்டால் , இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த விடாமல் மக்களைத் தடை செய்வதை நியாயப்படுத்த முடியாது எனவும் முறையீட்டில் சுட்டிக்காட்ப்பட்டுள்ளது.

போரில் இறந்தவர்களுக்கும் அவர்களின் கல்லறைகளுக்கும் மரியாதை செய்வது என்பது சர்வதேச மனிதவுரிமைச் சட்டங்களின் படி, குறிப்பாக மானிட கண்ணியத்துக்கான உரிமையின் படி பாதுகாக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கான சுகாதார கட்டுப்பாடுகளை காரணங்காட்டி, தமிழ்மக்களதது அடிப்படை உரிமைகளை பறிக்கும் வகையில் அதனை தவறாகப் சிறிலங்காவின் அரச கட்டமைப்பு பயன்படுத்தி வருவதாக மீளவும் ஐ.நாவுக்கு சுட்டிக்காட்டியுள்ள இந்த முறையீட்டில், நினைவேந்தலைத் தடை செய்யும் நீதிபதிகளின் முடிவுகள் என்பது தமிழர்களுக்கு எதிரான இன ஒடுக்குமுறையிலும், இனப் பாகுபாட்டிலும் வேர்கொண்டிருக்கக் காணலாம் எனவும் தெரிவித்துள்ளது.

நீதிமன்றங்களின் தடைக்கு அடிப்படையாக இருப்பது ‘பங்கேற்பாளர்களின் இன அடையாளமும் அதிகாரிகளோடு அவர்களுக்குள்ள உறவுமே’ ஆகும். காவல்துறையும் நீதிபதிகளும் அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்துவது ‘பாகுபாடான உரிமைமீறலும் தாக்குதலும்’ ஆகும். ‘சட்டங்களும் அவற்றுக்கான பொருள்விளக்கமும் பயன்பாடும் அமைதியான முறையில் ஒன்றுகூடும் உரிமையைத் துய்ப்பதில் ‘இனம்’ போன்ற அடிப்படையில் பாகுபாட்டைத் தோற்றுவிக்காத படி’ சிறிலங்கா உறுதி செய்ய வேண்டும்.’ மாவீர்ர் நாள் நினைவேந்தலைப் பொறுத்த வரை அமைதியாக நினைவேந்தும் கூட்டங்கூடும் உரிமையையும் கருத்துரிமையையும் ‘மதிக்கவும் உறுதி செய்யவும்’ வேண்டிய கடமையை சிறிலங்கா மீறுவது தெளிவாகத் தெரிகிறது எனவும் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்களுக்கான முறையீட்டில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சர்வதேச போர் நியமங்களுக்கு மாறாக தமிழீழ விடுதலைப்புலிகளின் மாவீரர் கல்லறைத் தோட்டங்கள் சிறிலங்கா ஆக்கிரமிப்பு படைகளினால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளதோடு, சர்வதேச கடப்பாடுகளுக்கு கட்டுப்படாத நிலையே காணப்படுகின்றமை இங்கு குறிப்பிடதக்கது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*