பொருளாதார நெருக்கடிக்கு நடுவே தொடரும் பண்பாட்டு இனஅழிப்பு – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

Link: https://www.einpresswire.com/article/576595605/

“ஆக்கிரமிப்பு இராணுவத்தினை வெளியேற்றச் சொல்லி மக்கள் போராட்டங்களை கூர்மைப்படுத்த வேண்டும்”Screen Shot 2022-06-13 at 11.30.56 PM

தனது திணைக்களங்கள் ஊடாக தமிழர் தேசத்தின் மீதான பண்பாட்டு இனஅழிப்பினை முன்னெடுத்து வரும் சிறிலங்கா அரசாங்கம், இதற்கு துணையாக தனது இனவழிப்பு இராணுவத்தினை கையாளுகின்றது.”— நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்NEW YORK, UNITED STATES, June 13, 2022 /EINPresswire.com/ —

சிறிலங்கா அரசாங்கம் பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்தாலும், தனது பௌத்த மேலாதிக்க சிந்தனையின் வடிவமாக, தமிழர் தேசத்தின் மீதான பண்பாட்டு இனஅழிப்பினை தொடர்கின்றது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஈழத்தமிழர்களின் பூர்வீக பண்பாட்டு வழிபாட்டு இடமான முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில், அத்துமீறி நிர்மாணிக்கப்பட்ட பௌத்த விகாரையின் கலச பூசை தமிழ் மக்களால் நேற்று (12-06-2022) தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது.

இவ்விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியில் விவகாரங்களுக்கான அமைச்சு,

பாரிய பொருளாதார நெருக்கடிக்கு சிக்குண்டுள்ள சிறிலங்கா அரசாங்கம், அதிலிருந்து மீளுவதற்கு பல மாற்றங்களை முன்னெடுத்து வந்தாலும், மாறாத ஓன்றாக தமிழர் தேசத்தின் மீதான அதன் ஆக்கிரமிப்பும், அபகரிப்பும் உள்ளது.

தொல்பொருள் செயலணி, வனஜீவராசிகள் இலக்கா என தனது திணைக்களங்கள் ஊடாக தமிழர் தேசத்தின் மீதான பண்பாட்டு இனஅழிப்பினை முன்னெடுத்து வரும் சிறிலங்கா அரசாங்கம், இதற்கு துணையாக தனது இனவழிப்பு இராணுவத்தினை கையாளுகின்றது.

மக்கள்திரள் போராட்டங்கள் மூலமே தமிழர் தேசத்தின் மீது தொடரும் இந்த பண்பாட்டு இனவழிப்பினை எதிர்கொள்ள முடியும் என்பதோடு, ஆக்கிரமிப்பு இராணுவத்தினை வெளியேற்றச் சொல்லி மக்கள் போராட்டங்களை கூர்மைப்படுத்த வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவாகாரங்களுக்கான அமைச்சு தெரிவித்துள்ளது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் (நா.க.த.அ) பற்றி About Transnational Government of Tamil Eelam (TGTE)

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (நா.க.த.அ) என்பது, ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, உலகெங்கிலும் பல நாடுகளில் வாழும் இலங்கைத் தீவைச் சோந்த பத்து இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்களுக்கான அரசாங்கமாகும்.

2009ஆம் ஆண்டு இலங்கை அரசால் பெருமளவில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நா.க.த.அ. உருவாக்கப்பட்டது. 135 அரசவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக உலகெங்கிலும் வாழும் தமிழர்களிடையே, சர்வதேச கண்காணிப்பாளர்களின் மேற்பார்வையில் நா.க.த.அ, மூன்று தடவை தேர்தல்களை நடாத்தியுள்ளது.

இதன் அரசவையானது, மேலவை (செனற் சபை), பிரதிநிதிகள் அவை என இரண்டு அவைகளையும் மற்றும் அமைச்சரவை ஒன்றையும் கொண்டுள்ளது.

தேசியம், தாயகம் மற்றும் சுயநிர்ணயம் ஆகிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு,அமைதியான ஜனநாயக மற்றும் இராஜதந்திர வழிகளில் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுக்கும் பரப்புரையை நா.க.த.அ முன்னெடுத்துள்ளது. மேலும், அதன் அரசியல் நோக்கங்களை,அமைதியான வழிகளில் மட்டுமே அடைய வேண்டும் எனவும் அதன் அரசியலமைப்பு வலியுறுத்துகிறது.

தமிழ் மக்களுக்கு எதிராகப் போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை புரிந்த குற்றவாளிகளைப் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்த வேண்டும் என்று சர்வதேச சமூகத்திடம் கோருவதுடன், தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்க பொது சன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் நா.க.த.அ. வலியுறுத்துகிறது.

நா.க.த.அ. இன் பிரதமர் திரு.விசுவநாதன் உருத்ரகுமாரன், நியூயோர்க்கைத் தளமாக்க் கொண்ட ஒரு வழக்கறிஞர் ஆவார்.

மின்னஞ்சல் முகவரி: pmo@tgte.org இணையத்தள முகவரி: www.tgte-us.org கீச்சக முகவரி: @TGTE_PMO நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் Transnational Government of Tamil Eelam (TGTE) + + + +1-614-202-3377 r.thave@tgte.org

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*