சாணக்கியனையும் பிள்ளையானையும் காணவில்லை!!

Link: https://ibctamil.com/article/sanakiyan-boycott-the-procession-in-batti-1675772725

சாணக்கியனையும் பிள்ளையானையும் காணவில்லை!!

‘வடக்கில் இருந்து கிழக்கை நோக்கி’ என்ற தொனிப்பொருளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இருந்து ஆரம்பமாகிய பேரணி வெற்றிகரமாக மட்டக்களப்பை அடைந்துள்ளது.

வடக்கு கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களினாலும் தமிழ் மக்களினாலும் முன்னெடுக்கப்பட்டு வந்த அந்தப் பேரணியின் நிறைவு நிகழ்வுகள் மட்டக்களப்பில் நடைபெற்றபோது, மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான பிள்ளையான் மற்றும் சாணக்கியன் போன்றவர்களை அந்த நிகழ்வுகள் எதிலும் காணக்கிடைக்கவில்லை என்று அங்கிருந்த ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.

வடக்கிலிருந்து பேரணியாக வந்த மக்களை ஆரவாரத்தோடு கிழக்கு மக்கள் வரவேற்றிருந்தார்கள்.

மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜனா உட்பட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் மக்களுடன் மக்களாக வந்து யாழில் இருந்து வந்த பேரணியை மட்டக்களப்பு நகர எல்லையில் வைத்து கைலாகுகொடுத்து ஆரத்தழுவி வரவேற்றிருந்தார்கள்.

பிள்ளையானையும், சாணக்கியனையும் பேரணி எதிலும் காணமுடியவில்லை.

தமிழ் தேசியம் சார்ந்த அந்த நிகழ்வில் பிள்ளையான் கலந்துகொள்ளாததற்குக் காரணங்கள் இருக்கின்றன.

தமிழ் தேசியத்திற்காக என்று அவர் போராடப்புறப்பட்டிருந்தாலும் வடக்கு கிழக்கு இணைந்த தேசியத்தை முற்றாகவே கைவிட்டு தற்பொழுது ‘தனி கிழக்கு’ என்ற பிரதேசவாதத்தை முன்நிலைப்படுத்தி அரசியல் செய்துவருகின்றார்.

‘வடக்கும் கிழக்கும் இணையவே கூடாது’ என்று நிலைப்பாடு எடுத்துவரும் பிள்ளையான், ‘வடக்கில் இருந்து கிழக்கை நோக்கி’ என்ற தொனிப்பொருளில் அமைந்த ஆர்பாட்ட ஊர்லத்தை எதிர்த்ததோ, அல்லது அதனைக் குழப்ப முயன்றதோ ஒன்றும் புதிதான விடயம் கிடையாது.

ஆனால், சாணக்கியனின் அரசியல் அப்படிப்பட்டதல்ல.

தமிழ் தேசியத்துக்கு முற்றிலும் எதிராக அரசியல் செய்துகொண்டு தமிழ் மக்கள் மத்தியில் நுழைந்த சாணக்கியன், ஒரு சந்தர்ப்பத்தில் மனம்மாறி> தமிழ் தேசிய அரசியலைச் செய்ய ஆரம்பித்திருந்தார்.

வடக்கு கிழக்கு இணையவேண்டும் என்ற குறிக்கோழுடன் செயற்படுவதாகக கூறிக்கொண்டிருக்கின்றார் .

அப்படிப்பட்ட சாணக்கியன் ‘வடக்கிலிருந்து கிழக்கைநோக்கி’ என்ற கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் பேரணியை ஏன் புறக்கணித்தார்?

இறுதி நிழ்வில் கலந்துகொள்ளவேண்டாம் என்று தனது ஆதரவாளர்களை எதற்காகத் தடுத்தார்?

வடக்கும் கிழக்கும் இணைவது பிள்ளையானைப் போலவே சாணக்கியனுக்கும் பிடிக்கவில்லையா?

தமிழ் மக்கள் தாமாகவே முன்வந்து தமது அபிலாசைகளை வெளிஉலகிற்குச் சொல்லுவதை சாணக்கியன் விரும்பவில்லையா?

தமிழ் மக்கள் தங்களது உரிமைகளுக்காகப் போராடாமல், அரசியல்வாதிகள் போராடுகின்றபோது அர்களுக்குப்பின்னால்தான் நிற்கவேண்டுமா?

தமிழ் இளைஞர்களும் தமிழ் மாணவர்களும் அரசியல் மயப்படுத்தப்பட்டு தங்களது உரிமைகளுக்காகப் போராடாமல் வெறுமனே அரசியல்வாதிகளுக்குப் பின்னால் வால்பித்துக்கொண்டு திரியவேண்டும் என்பதுதான் சாணக்கியனின் விரும்பமா?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*