ஐ நா வில் சிறிலங்காவிற்கு படுதோல்வி – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்ந்த சட்ட நடவடிக்கையின்தீர்ப்பு.

Link: https://www.einpresswire.com/article/629314450/

மனித உரிமை ஆணைக்குழுவின் 17 நீதிபதிகளும் சிறிலங்காவிற்கு எதிராக ஏகமனதாக தீர்ப்பு

இச் சித்திரவதையை சிறிலங்கா அரசாங்கம்மறுத்தபோதிலும், மனித உரிமை ஆணைக் குழு அம் மறுப்பை நிராகரித்தது. சிறிலங்காவிலேயே உள்நாட்டு தீர்வுகளை நாடி இருக்கலாம் என்ற வாதத்தைமனித உரிமைஆணைக்குழு நிராகரித்தது.”— பிரதமர் உருத்திரகுமாரன்GENEVA, SWITZERLAND, April 21, 2023/EINPresswire.com/ —

சிறிலங்காவினால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட முன்னாள் தமிழீழ விதலைப் புலிப் போராளி சார்பாகசர்வதேச சிவில் மனித உரிமைப் பட்டயத்தின் நெறிமுறையின்(Optional protocol) கீழ் , ஐ. நா மனிதஉரிமைஆணைக்குழு முன்பாக சட்ட நடவடிக்கை ஒன்றை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் 2014ஆம் ஆண்டுஜீன் மாதம் ஆரம்பித்து இருந்தது. இச் சட்ட நடவடிக்கைக்கு ராஜா வழக்கறிஞர் (King’s Counsel ஜெஃப்ரிறொபேர்ட்ஸனை(Geoffrey Robertson) முன்னாள் தமிழீழ விதலைப் புலிப் போராளி சார்பாகநியமித்துஇருந்தது. மனித உரிமை ஆணைக் குழுவின் முக்கியத்துவம் வாய்ந்த இத் தீர்ப்புசிறிலங்காவினால்சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட அனைவருக்கும் கிடைத்த வெற்றியாகும்.

சிறிலங்கா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, ஒரு மாதமாக பொலிஸாரால்சித்திரவதைக்குஉள்ளாக்கப்ப்ட்டு, பின்னர் சுவிற்ஸர்லாந்துக்கு தப்பிச் சென்ற முன்னாள் தமிழீழ விதலைப்புலிப் போராளி தொடர்பன சட்ட நடவடிக்கையில் பங்கேற்ற 17 சர்வதேச நீதிபதிகளாலும் சிறிலங்காஅரசாங்கம் கண்டிக்கப்பட்டுள்ளது. பலமான தாக்குதல்கள், மின் அதிர்ச்சி,. பாலியல் வன்புணர்வு ஆகியஉள்ளடங்கிய சித்திரவதைகள் சுவிஸ் வைத்தியர்களால் உறுதிப்படுத்தப்பட்டது. இச் சித்திரவதையை சிறிலங்கா அரசாங்கம்மறுத்தபோதிலும், மனித உரிமை ஆணைக் குழு அம் மறுப்பை நிராகரித்தது. மேலும், குறித்த நபர் சிறிலங்காவிலேயே பயன் தரக்கூடிய உள்நாட்டு தீர்வுகளை நாடி இருக்கலாம் என்ற வாதத்தைமனித உரிமைஆணைக்குழு நிராகரித்தது. இத் தீர்ப்பு பயன் தரக்கூடிய உள்நாட்டு தீர்வுகள் எதுவும்சிறிலங்காவில் இல்லை என்பதை நிரூபித்துள்ளது.

சிறிலங்காவை சுயாதீனமாக, காட்டுமிராண்டித்தனமான சித்திரவதைக்கு பொறுப்பான பொலிஸாரைவிசாரணை செய்யுமாறும், அவர்கள் மீது வழக்குத் தொடர்ந்து தண்டிக்கப்படுவதை உறுதிப்படுத்துமாறும்ஐ.நாமனித உரிமை ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட நபருக்கு போதுமான நட்டஈட்டைசிறிலங்கா அரசாங்கம் வழங்க வேண்டும் எனவும், இவ்வாறான நடத்தை மீண்டும் நடைபெறாமலிருக்கசிறிலங்கா கட்டாயம் தனது சட்டங்களை மாற்ற வேண்டும் எனவும் கூறியுள்ளது.

றொபேர்ட்ஸன் (Robertson) கருத்துத் தெரிவிக்கையில், பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துநபர்களையும் சித்திரவதையில் இருந்து பாதுகாப்பதற்கு (தாக்குதல்களிலிருந்தும், ஏனையவகையானசித்திரவதை மற்றும் முறைகேடாக நடத்துவதிலிருந்து பாதுகாப்பதற்கு ) சிறிலங்காவிற்கு மட்டுமல்லாமல் ஏனைய நாடுகளின் அரசாங்கங்களுக்கும் உள்ள சட்ட கடமைப்பாடு தொடர்பில் இத் தீர்ப்பு முக்கியமானதொருதீர்ப்பு எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் றொபேர்ட்ஸன் ((Robertson) இச்சித்திரவதைக்கு பொறுப்பான பொலிஸாரைத் தண்டிப்பது தொடர்பாகவும். சிறைக்கைதிகளுக்கு மேலதிகபாதுகாப்பை வழங்குவது தொடர்பாகவும்,, சிறிலங்கா எவ்வாறு தனது சட்டங்களை மாற்றினார்களென ஆறுமாதங்களில் மனித உரிமை ஆணைக்குழுவிற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் சிறிலங்காவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.இன மற்றும் அரசியல் குரோதங்கள் பொலிஸ் தடுப்பில்இறப்புக்களுக்கும், சித்திரவதைகளுக்கும் பங்களித்துள்ளமை கவனத்தில் எடுக்கப்பட வேண்டும் எனவும்வழக்கறிஞர் ஜெஃப்ரிறொபேர்ட்ஸன் (Geoffrey Robertson) கூறினார்.

Reference: Human Rights Committee CCPR/C/137/D/2406/2014 Distr.: General 12April 2023 https://tbinternet.ohchr.org/_layouts/15/treatybodyexternal/Download.aspx?symbolno=CCPR%2FC%2F137%2FD%2F2406%2F2014&Lang=en 1 of 110 UN Condemns Sri Lanka. Ordered it to Punish the Perpetrators & Pay Compensation for a Tamil Torture Victim

https://www.einpresswire.com/article/627976158/un-condemns-sri-lanka-ordered-it-to-punish-the-perpetrators-pay-compensation-for-a-tamil-torture-victim

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*