இவர் இறுதிக் கட்ட ஆயுதப் போரின் போது இலங்கையில் ஐக்கிய நாடுகளின் பேச்சாளராக பணியாற்றினார்.
இலங்கையில் முள்ளிவாய்க்கால் என்ற இடத்தில் நடைபெற்ற இனவழிப்பு நினைவாக இந்த நினைவேந்தல் நிகழ்வு விரிவுரைக்கு முள்ளிவாய்க்கால் என்று பெயரிடப்பட்டது,”— நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்NEW YORK CITY, UNITED STATES, May 16, 2023/EINPresswire.com/ —
இலங்கையில் நடந்த இறுதிப்போரின் போரின் போது பணியாற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் அதிகாரி கோர்டன் வெயிஸ் ((Mr. Gordon Weiss ), முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறித்து விசேட உரை வழங்கவுள்ளார் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது. இவர் இறுதிக் கட்ட ஆயுதப் போரின் போது இலங்கையில் ஐக்கிய நாடுகளின் பேச்சாளராக பணியாற்றினார்.
திரு. கோடன் வெயிஸ் ஐக்கிய நாடுகள் சபையில்இரண்டு தசாப்தங்கள் சேவையாற்றினார். இலங்கையில் ஆயுதப் போரின் இறுதிக் கட்டத்தில் ஐ.நா. செய்தித் தொடர்பாளராகப் பணியாற்றினார்,விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட ,புனைகதை அல்லாத ,தி கேச் (The Cage) என்ற நூலையும் எழுதியுள்ளார்.
இலங்கையில் முள்ளிவாய்க்கால் என்ற இடத்தில் நடைபெற்ற இனவழிப்பு நினைவாக இந்த நினைவேந்தல் நிகழ்வு விரிவுரைக்கு முள்ளிவாய்க்கால் என்று பெயரிடப்பட்டது, அங்கு ஐ.நா.வின் உள் ஆய்வு அறிக்கையின்படி, போரின் இறுதி ஆறு மாதங்களில் சுமார் 70 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் தமிழ் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர்.
- காலம்:-மே 18 (வியாழன்)
- நேரம் 7 – 9 pm – (நியூயார்க் நேரம்)
- நேரலையில் பார்க்கவும்: www.tgte.tv
- மே 18 ஆம் தேதியை தமிழ் தேசிய துக்க தினமாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.
- முன்னாள் அமெரிக்க அட்டர்னி ஜெனரல் ராம்சே கிளார்க் மே 18, 2015 அன்று தொடக்க நினைவு விரிவுரையை வழங்கினார்.
- கிழக்கு திமோரின் சுதந்திரத்திற்கு வழிவகுத்த கிழக்கு திமோரின் வாக்கெடுப்பில் முக்கிய பங்கு வகித்த ஆலன் நைரன் 2வது நினைவு விரிவுரையை ஆற்றினார்.
- கொசோவோவின் சுதந்திரத்தில் குறிப்பிடத்தக்க பங்காற்றிய டாக்டர் அலுஷ் காஷி மூன்றாவது நினைவு விரிவுரையை ஆற்றினார்.
- புகழ்பெற்ற சர்வதேச வழக்கறிஞர் ஹீதர் ரியான் நான்காவது நினைவு சொற்பொழிவை ஆற்றினார்.
- தென் சூடான் நாட்டின் சுதந்திரத்திற்கு வழிவகுத்த பொது வாக்கெடுப்பில் முக்கிய பங்காற்றிய திரு. லடு ஜடா குபேக் ஐந்தாவது விரிவுரையை ஆற்றினார்.
- கிழக்கு திமோரின் முன்னாள் ஜனாதிபதியும் நோபல் பரிசு பெற்றவருமான ஜோஸ் ராமோஸ்-ஹோர்டா ஆறாவது விரிவுரையை ஆற்றினார்.
- இனப்படுகொலை தடுப்புக்கான ஐ.நா.வின் முன்னாள் சிறப்பு ஆலோசகர் அடாமா டியெங் ஏழாவது விரிவுரையை ஆற்றினார்.
- ஆர்மீனியாவின் முன்னாள் ஜனாதிபதி கௌரவ ஆர்மென் சர்கிசியன் எட்டாவது விரிவுரையை ஆற்றினார்.
International Truth and Justice Project (ITJP) அமைப்பு பெப்ரவரி 2017 இல் ஐ.நாவிடம் ஒப்படைத்த, தமிழ்ப் பெண்கள் “பாலியல் அடிமைகளாக” அடைக்கப்பட்டுள்ள இலங்கை இராணுவ “கற்பழிப்பு முகாம்கள்” பற்றிய விபரங்கள்.
மேலும், ஏப்ரல் 2013 இல் பிரித்தானிய வெளியுறவு மற்றும் பொதுநலவாய அலுவலக அறிக்கையின்படி, இலங்கையில் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் போர் விதவைகள் உள்ளனர்.
ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் காணாமல் போனவர்கள், வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள். 2020 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் செயற்குழு வெளியிட்ட தரவின்படி, உலகில் இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் இலங்கையில் இடம்பெற்றது.
இலங்கைப் பாதுகாப்புப் படை உறுப்பினர்கள் சிங்கள சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதோடு பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் தமிழ் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
1977 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழீழம் என்ற ஒரு சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட நாட்டை அமைப்பதற்காக தமிழர்கள் பெருமளவில் வாக்களித்தனர். இந்த நாடாளுமன்றத் தேர்தல் இலங்கை அரசால் நடத்தப்பட்டது.
UN Official who Served in Sri Lanka During the War to Deliver 9th Annual Mullivaikal Memorial Lecture – TGTE https://www.einpresswire.com/article/633650283/un-official-who-served-in-sri-lanka-during-the-war-to-deliver-9th-annual-mullivaikal-memorial-lecture-tgte
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் (நா.க.த.அ) பற்றி About Transnational Government of Tamil Eelam (TGTE)
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (நா.க.த.அ) என்பது, ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, உலகெங்கிலும் பல நாடுகளில் வாழும் இலங்கைத் தீவைச் சோந்த பத்து இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்களுக்கான அரசாங்கமாகும்.
2009ஆம் ஆண்டு இலங்கை அரசால் பெருமளவில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நா.க.த.அ. உருவாக்கப்பட்டது. 135 அரசவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக உலகெங்கிலும் வாழும் தமிழர்களிடையே, சர்வதேச கண்காணிப்பாளர்களின் மேற்பார்வையில் நா.க.த.அ, மூன்று தடவை தேர்தல்களை நடாத்தியுள்ளது.
இதன் அரசவையானது, மேலவை (செனற் சபை), பிரதிநிதிகள் அவை என இரண்டு அவைகளையும் மற்றும் அமைச்சரவை ஒன்றையும் கொண்டுள்ளது.
தேசியம், தாயகம் மற்றும் சுயநிர்ணயம் ஆகிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு,அமைதியான ஜனநாயக மற்றும் இராஜதந்திர வழிகளில் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுக்கும் பரப்புரையை நா.க.த.அ முன்னெடுத்துள்ளது. மேலும், அதன் அரசியல் நோக்கங்களை,அமைதியான வழிகளில் மட்டுமே அடைய வேண்டும் எனவும் அதன் அரசியலமைப்பு வலியுறுத்துகிறது.
தமிழ் மக்களுக்கு எதிராகப் போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை புரிந்த குற்றவாளிகளைப் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்த வேண்டும் என்று சர்வதேச சமூகத்திடம் கோருவதுடன், தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்க பொது சன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் நா.க.த.அ. வலியுறுத்துகிறது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதமர் திரு.விசுவநாதன் உருத்ரகுமாரன், நியூயோர்க்கைத் தளமாக்க் கொண்ட ஒரு வழக்கறிஞர் ஆவார்.
Follow us on Twitter: @TGTE_PMO Email: pmo@tgte.org Web: www.tgte-us.org, www.tgte.org Transnational Government of Tamil Eelam TGTE +1 614-202-3377 r.thave@tgte.org Visit us on social media: Facebook Twitter Instagram