நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் “மலையகத் தமிழர்களின் 200 ஆண்டுகள் துயரம்” கருத்தரங்கிற்கு தமிழ்நாடு அரசு அனுமதி மறுப்பு

Link: https://www.einpresswire.com/article/662902095/200

இலங்கைத் தீவிலுள்ள தமிழர்களின் அவலநிலையை தமிழ் நாட்டிலுள்ள தமிழர்கள் விவாதிப்பதற்கான பேச்சுச் சுதந்திரத்தை தமிழ்நாடு அரசு மறுக்கிறது

இலங்கைத்தீவிலுள்ள தமிழர்களின் அவலநிலையைவிவாதிக்க, மற்றும் அவர்களுக்கு உதவும் வழிகளைஆராய்வதற்கான தமிழ் நாட்டிலுள்ள 60 மில்லியன் தமிழர்களின் அரசியல் வெளியையும் இத் தடை மறுக்கிறது.”— விஸ்வநாதன் உருத்திரகுமாரன்CHENNAI, TAMIL NADU, INDIA, October 19, 2023 /EINPresswire.com/ —

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தமிழ்நாட்டுஉறுப்பினர்களால் ஒழுங்கமைக்கப்பட்டு கடந்தஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த “இலங்கைத்தீவில் மலையகத் தமிழர்களின் 200 ஆண்டுகள்துயரம்” எனத் தலைப்பிடப்பட்ட நாடுகடந்த தமிழீழஅரசாங்கத்தின் கருத்தரங்கிற்கு தமிழ்நாடு அரசின்அனுமதி மறுப்பை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்கண்டிக்கிறது. இந்த ஜனநாயகப் பண்பற்றசெயலானது, பேச்சுச் சுதந்திரம் மற்றும்ஒன்றுகூடும் சுதந்திரம் ஆகிய உரிமைகளையும்மீறுகிறது.

மகாத்மா காந்தி குறிப்பிட்டது போன்று. “மனிதன் ஒருவனது சுதந்திரத்திற்கு, சுவாசிப்பதற்கு ஒக்சிசனைப் போன்று, பேச்சுச்சுதந்திரம் அத்தியாவசியமானது.”

இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் காலனித்துவநாடாக இருந்த ஐக்கிய இராச்சியம், இந்தியாவின்தமிழ்நாட்டிலிருந்து தமிழர்களை சிறீலங்காவில்முதலில் கோப்பித் தோட்டங்களிலும், பின்னர்தேயிலைத் தோட்டங்களிலும் வேலை செய்வதற்குகொண்டு வந்தபோது அவர்களின் உரிமைகள்பாதுகாக்கப்படுமென உறுதியளித்தது. 1948ஆம்ஆண்டு முதல், சுதந்திரத்தைத் தொடர்ந்துஉடனடியாக சிறீலங்கா அரசாங்கமானது 1948 சிலோன் குடியுரிமைச் சட்டம், 1949 இந்தியபாகிஸ்தானிய வசிப்பிட குடியுரிமைச் சட்டம்,1949 சிலோன் பாராளுமன்ற தேர்தல்கள் சட்டம் மூலம் 10 மில்லியன் மலையகத் தமிழர்களின்வாக்குரிமையைப் பறித்து, அவர்களைநாடற்றவர்களாக்கி ஐக்கிய இராச்சியம் மலையகத்தமிழர்களுக்கு கொடுத்த உறுதிமொழியைசிறீலங்கா புறந்தள்ளியது.

1958, 1977, 1981, 1983ஆம் ஆண்டுகளில் மலையகத் தமிழர்கள்இனப்படுகொலைகளுக்கு உள்ளாகியதுடன், இனவன்முறையின் இலக்காகக் காணப்பட்டனர். இன்றை வரைக்கும் சிறீலங்கா பொருளாதாரத்தைமேம்படுத்துகின்ற வருமானத்தை அளிக்கும்தொழிற்துறையாகவுள்ள சிறீலங்கா தேயிலைத்தொழிற்துறையின் முதுகெலும்பாகவுள்ளசிறீலங்காவிலுள்ள மலையகத் தமிழர்களின்சமூகப்பொருளாதார மற்றும் வசிப்பிட நிலைகள்மனிதநிலைக்கு கீழ்ப்பட்டவையாக உள்ளன.

சிறீலங்காவிலுள்ள மலையகத் தமிழர்களின்வாழ்வுகளை உயர்த்துவதற்கான வழிகள் மற்றும்வழிவகைகளை விவாதிப்பதையே நாடுகடந்ததமிழீழ அரசாங்கத்தின் கருத்தரங்கு நோக்காகக்கொண்டிருந்தது. கருத்தரங்கானது ஓய்வுபெற்றதமிழ்நாடு நீதிபதி அரி பரந்தாமனால் தலைமைதாங்கப்படவிருந்தது. உறுதிப்படுத்தப்பட்டபேச்சாளர்களில், அனைத்திந்திய மக்கள் சிவில்உரிமைகள் சங்கத்தின் செயலாளர் எஸ். சுரேஷ், திரைப்பட இயக்குநர் திரு.கோபிநயினார், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செனட் சபைஉறுப்பினர் பேராசிரியர் சரஸ்வதி, தமிழ்நாடுசட்டசபை உறுப்பினர் திரு.எஸ்.எஸ்.பாலாஜி, கொங்கு இளைஞர் சங்கத்தின் தலைவர் திரு. உ.தனியரசு (முன்னாள் எம்.எல்.ஏ), சிரேஷ்டவழக்கறிஞர், சென்னை உயர் நீதிமன்றம்திரு.சங்கரசுப்பு, , தமிழ் வழக்கறிஞர் சங்கத்தின்வழக்கறிஞர் டி.எம்.ஜான்சன், நாடுகடந்த தமிழீழஅரசாங்கத்தின் தமிழ் நாட்டு உறுப்பினர்கள், ஏனைய தமிழ் நாட்டைத் தளமாகக் கொண்ட பேச்சாளர்கள் உள்ளடங்கியுள்ளனர்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உள்ளரங்ககருத்தரங்கிற்கு அனுமதி மறுத்தமை தொடர்பாகதமிழ்நாடு பொலிஸ் அதிகாரிகள், எழுத்தில்ஒன்றைரை மாதங்களுக்கு முன் நாடுகடந்த தமிழீழஅரசாங்கம் கோரிய அனுமதியின் மறுப்புக்கான எவ்வித காரணத்தையும் இன்றுவரைதெரிவித்திருக்கவில்லை.

ஜனநாயக ஆட்சியின் அச்சு சட்டவாட்சி. கருத்தரங்கின் மீதான தடையானது, பேச்சுச்சுதந்திரம் மற்றும் ஒன்றுகூடும் சுதந்திரத்தின்பாரிய மீறலொன்றாகும். தவிர, இலங்கைத்தீவிலுள்ள தமிழர்களின் அவலநிலையைவிவாதிக்க மற்றும் அவர்களுக்கு உதவும் வழிகளைஆராய்வதற்கான தமிழ் நாட்டிலுள்ள 60 மில்லியன்தமிழர்களின் அரசியல் வெளியையும் இதுமறுக்கிறது.

இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின்தடையை நீடிப்பு தொடர்புடைய சட்டநடவடிக்கைகளில் 2019ஆம் ஆண்டில் நாடுகடந்ததமிழீழ அரசாங்கம், துதமிழீழ விடுதலைப் புலிகள்மீதான தடையானது இந்தியாவில் நாடுகடந்ததமிழீழ அரசாங்கத்தின் அரசியல் செயற்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்துகின்றதென நாடுகடந்ததமிழீழ அரசாங்கம் வாதிட்டிருந்தது. இந்தியஅரசாங்கத்தின் நிலைப்பாட்டின் அடிப்படையில், இந்தியாவில் அரசியல் செய்ற்பாடுகளில்நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஈடுபடுவதில் எவ்வித சட்டரீதியான தடையுமில்லையென தீர்ப்பாயம் குறிப்பிட்டிருந்தது.

”மலையகத் தமிழர்களின் 200 ஆண்டுகள் துயரம்” கருத்தரங்கு மீதான தமிழ்நாடு அரடின் அனுமதிமறுப்பை, இந்திய நீதித்துறையில் சட்ட ரீதியாகசவாலுக்குட்படுத்துவதற்கானதயார்ப்படுத்தல்களை நாடுகடந்த தமிழீழஅரசாங்கத்தின் தமிழ்நாடு உறுப்பினர்கள், த.தமிழினியன், த.முகேஷ், கோ.பாவேந்தன், பேராசிரியர் சரஸ்வதி ஆகியோர்மேற்கொண்டுள்ளனர்.

விஸ்வநாதன் உருத்திரகுமாரன் பிரதமர் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*