2022ம் ஆண்டு மேன்முறையீடு செய்திருந்த இந்த வழக்கு 2024ம் ஆண்டு மார்ச் 12ம் திகதி நீதிமன்றத்திற்கு வருகின்றது.
நீதியற்ற இந்தத் தடையை நீக்க, உலகம் பூராகவும் வாழும் பல்லின மக்களிடம் இருந்து நிதிப்பங்களிப்பை பெறுவதற்காக, இணையத்தளம் ஜனவரி 14ந் திகதி ஆரம்பிக்கப்பட உள்ளது. இந்த நீதிப்போராட்டத்திற்கு கரம் கொடுப்போம்”— நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்LONDON, UNITED KINGDOM, January 15, 2024 /EINPresswire.com/ — மௌனிக்கப்பட்ட ஆயுதப் போராட்டத்தின் மீதான நீதியற்ற தடையை சவாலுக்குட்படுத்தவும், சிறீலங்காவில் இனவழிப்புக்கான மறைமுக ஆதரவை இல்லாமற் செய்யவும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் மேன்முறையீட்டு ஆணைக்குழுவிடம் மேன்முறையிட்டிருந்தது.
பிரித்தானிய உள்துறை செயலாளர் தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை மதிப்பீடு செய்த முறைமையானது நீதிக் கோட்பாடுகளுக்கு முரணானது என்றும், அதன் காரணமாக சட்ட வலுவற்றது என்றும் கடந்த 2020ஆம் ஆண்டு ஒக்டோபர் 21ஆம் திகதி ஆணைக்குழு தீர்ப்பளித்து இருந்தது. அச் சட்டவிரோதச் செயலுக்கு பரிகாரமாக, பிரித்தானிய உள்துறை செயலாளர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தடை தொடர்பான முடிவை மீள் பரிசீலனை செய்யும்படி உத்தரவிட்டு இருந்தது.
பிரித்தானிய உள்துறை செயலாளர் மீண்டும் கடந்த 2021ஆம் ஆண்டு ஓகஸ்ட் 31ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளை தடைசெய்யப்பட்ட அமைப்புகளுக்குள் பேணும் தனது முடிவை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு அறிவித்திருந்தார். இந்த முடிவிற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மேன்முறையீடு செய்திருந்தது.
2022ம் ஆண்டு மேன்முறையீடு செய்திருந்த இந்த வழக்கு 2024ம் ஆண்டு மார்ச் 12ம் திகதி நீதிமன்றத்திற்கு வருகின்றது.
நீதியற்ற இந்த தடையை நீக்கும் செயற்பாடுகள் மற்றும் சட்ட சவாலுக்கான இந்த மேன்முறையீடானது அடுத்த கட்டத்துக்கு நகர்வது ஒட்டுமொத்த தமிழ் மக்களின் கடமை என்பதை உணர்ந்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் இந்த நீதிப்போராட்டத்திற்கு அனைவரும் கரம் கொடுப்போம்.
நீதியற்ற இந்தத் தடையை நீக்க உலகம் பூராகவும் வாழும் பல்லின மக்களிடம் இருந்தும் நிதிப்பங்களிப்பை பெறுவதற்காக கீழ்வரும் இணையத்தளம் ஜனவரி 14ந் திகதி ஆரம்பிக்கப்பட உள்ளது.
https://www.crowdjustice.com/draft/10043/r/BeoKFnu3R2CdmqI4HRWxrg/- நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பற்றி About Transnational Government of Tamil Eelam (TGTE)
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (நா.க.த.அ) என்பது, ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, உலகெங்கிலும் பல நாடுகளில் வாழும் இலங்கைத் தீவைச் சோந்த பத்து இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்களுக்கான அரசாங்கமாகும்.
2009ஆம் ஆண்டு இலங்கை அரசால் பெருமளவில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நா.க.த.அ. உருவாக்கப்பட்டது. 135 அரசவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக உலகெங்கிலும் வாழும் தமிழர்களிடையே, சர்வதேச கண்காணிப்பாளர்களின் மேற்பார்வையில் நா.க.த.அ, மூன்று தடவை தேர்தல்களை நடாத்தியுள்ளது.
இதன் அரசவையானது, மேலவை (செனற் சபை), பிரதிநிதிகள் அவை என இரண்டு அவைகளையும் மற்றும் அமைச்சரவை ஒன்றையும் கொண்டுள்ளது.
தேசியம், தாயகம் மற்றும் சுயநிர்ணயம் ஆகிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு,அமைதியான ஜனநாயக மற்றும் இராஜதந்திர வழிகளில் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுக்கும் பரப்புரையை நா.க.த.அ முன்னெடுத்துள்ளது. மேலும், அதன் அரசியல் நோக்கங்களை,அமைதியான வழிகளில் மட்டுமே அடைய வேண்டும் எனவும் அதன் அரசியலமைப்பு வலியுறுத்துகிறது.
தமிழ் மக்களுக்கு எதிராகப் போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை புரிந்த குற்றவாளிகளைப் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்த வேண்டும் என்று சர்வதேச சமூகத்திடம் கோருவதுடன், தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்க பொது சன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் நா.க.த.அ. வலியுறுத்துகிறது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதமர் திரு.விசுவநாதன் உருத்ரகுமாரன், நியூயோர்க்கைத் தளமாக்க் கொண்ட ஒரு வழக்கறிஞர் ஆவார்.
Follow us on Twitter: @TGTE_PMO Email: pmo@tgte.org Web: www.tgte-us.org
ஊடக அமைச்சு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் 416-830-4305 media.team@tgte.org Transnational Government of Tamil Eelam TGTE +1 614-202-3377 r.thave@tgte.org Visit us on social media: Facebook Twitter
Be the first to comment