Back

20/03/2024

ஐக்கிய இராச்சியத்திற்கான நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஊடக அறிக்கை

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது அரசவைத் தேர்தல்

எதிர்வரும் வைகாசி 5ஆம் திகதி (05/05/2024) அன்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது அரசவைக்கான புதிய அங்கத்தவர்களை தெரிவு செய்யும் தேர்தல்கள் உலகின் பல நாடுகளிலும் இடம் பெற உள்ளன.

ஐக்கிய இராச்சியத்திற்கான (UK) தேர்தலில் 20 நாடுகடந்த தமிழீழ அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு இடம்பெறும்.

ஐக்கிய இராச்சியத்தில் ஐந்து (5) தேர்தல் மாவட்டங்களிலிருந்தும் மொத்தம் 20 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

அண்மை காலங்களில், உலகின் பல நாடுகளின் பாராளுமன்றங்களில்  பெண்கள், இளையோருக்கான ஆசனங்கள் அதிகரிக்கப்பட்டு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதனை பல நாடுகளிலும் நாம் காணக்கூடியதாக உள்ளது. இந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தலிலும் பெண்கள்,  இளையோரின் பங்களிப்பினை ஊக்குவிப்பதற்காக பெண்களுக்கு குறைந்தபட்சம் 25 வீதம் (25%) ஆசனங்களும், இளையோருக்கு 25 வீதம் (25%) ஆசனங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பிரித்தானியாவில் பிறந்து வளர்ந்த அல்லது சிறு வயதிலேயே பிரித்தானியாவிற்கு புலம்பெயர்ந்து வந்த இளையோரின் பங்களிப்பினை மிகவும் வரவேற்கிறோம்.

ஐக்கிய இராச்சியத்திற்கான (UK)  5 தேர்தல் மாவட்டங்கள் பின்வருமாறு. ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலிருந்து நான்கு (4) பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுவார்கள்:

 

தேர்தல் மாவட்டம் 1: 

லண்டன் – வடமேற்கு (NW LONDON) இந்த தேர்தல் மாவட்டம் HARROW, BRENT, EALING, BARNET, WESTMINISTER, HOUNSLOW, HILLINGTON நகராட்சிகளை (Councils) உள்ளடக்கும்  

தேர்தல் மாவட்டம் 2:

லண்டன் – வடகிழக்கு (NE LONDON) இந்த தேர்தல் மாவட்டம் ENFIELD, WALTHAMSTOW, NEWHAM, BARKING, REDBRIDGE நகராட்சிகளை (Councils) உள்ளடக்கும்  

தேர்தல் மாவட்டம் 3:

லண்டன் – தெற்கு (SOUTH LONDON) இந்த தேர்தல் மாவட்டம் KINGDTON, MERTON, SUTTON, CROYDON, LEWISHAM, BROMLEY நகராட்சிகளை (Councils) உள்ளடக்கும்  

தேர்தல் மாவட்டம் 4:

இங்கிலாந்து ENGLAND (லண்டன் தவிர்ந்த இடங்கள்)     (OUTSIDE LONDON – OTHER CITIES)  

தேர்தல் மாவட்டம் 5:

ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் (SCOTLAND & WALES)

பிரதிநிதிகளுக்கான வேட்பு மனுதாக்கல் தற்பொழுது ஏற்றுக்கொள்ளப்படுகின்றன மனுதாரர்கள் அதற்குரிய விண்ணப்பப்படிவத்துடன், போட்டியிட தகமை விண்ணப்பப்படிவத்தையும் சமர்ப்பிக்கவேண்டும். இதற்குரிய தகவல், தேர்தல் நடைமுறை விதிகள், வேட்பு மனுக்கள் மற்றும் இதர விடயங்கள் ஐக்கிய இராச்சியத்திற்கான ஆணைய அலுவலகம், அதன் மின்னஞ்சல், இணையத்தளம் (WEBSITE) ஊடாக பெற்றுக்கொள்ளலாம். விவரங்கள் பின்வருமாறு:-

அலுவலகம்: 227 PRESTON ROAD, WEMBLEY, HA9 8NF

மின்னஞ்சல்: ecuk@tgte.org

இணையத்தளம்: tgte.org

தேர்தலில் போட்டியிட தகமை பெற்றவர்கள் தேர்தலுக்கான விண்ணப்பப் படிவத்தையும் கட்டுப் பணத்தையும் சித்திரை 10 ஆம் திகதிக்கு (10/04/2024) முன்னர் எமது லண்டன் பணிமனையில் நேரிலோ அல்லது தபால் மூலம் தேர்தல் ஆணையாளருக்கோ அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

நன்றி,

கு. சிதம்பரப்பிள்ளை

தேர்தல் ஆணையாளர் – ஐக்கிய இராச்சியம்