Back

USA – மார்ச் 18, 2024

ஊடகச்செய்தி

அமெரிக்க 10 பிரதிநிதிகளுக்கான நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வேட்பு மனுதாக்கல் தொடங்குகின்றது – மே 5, 2024 இல் பொதுத் தேர்தல்

2010 ஆம் ஆண்டு முதல்  தமிழீழ  மக்களின்  நீதிக்கும், இறையாண்மைக்குமாக  ஜனநாயக  வழியில் நேர்கொண்ட கொள்கையுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் போராடிவருகின்றது  என்பது நீங்கள் அனைவரும் அறிந்ததே!  அதன் நான்காவது தவணைக்கான 10 பிரதிநிதிகளுக்கான  வேட்பு மனுதாக்கல்  மார்ச் 15, 2024 என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின்  அமெரிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

அமெரிக்கா நாட்டினை ஒன்பது  தேர்தல்  மாநிலங்களாக  பிரிக்கப்பட்டு அவற்றிலிருந்து 10 பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுவார்கள்.  அமெரிக்காவில் வாழும் தமிழ் மக்கள்  செறிவைப்  பொறுத்து,  தமிழ் மக்களைப்  பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இந்த மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.

அவை பின்வருமாறு:
  1. California North – 1 பிரதிநிதி
  2. California South – 1 பிரதிநிதி
  3. Massachusetts – 1 பிரதிநிதி
  4. Mid-west – 1 பிரதிநிதி
  5. New Jersey – 2 பிரதிநிதிகள்
  6. New York – 1 பிரதிநிதி
  7. Pennsylvania – 1 பிரதிநிதி
  8. Texas -– 1 பிரதிநிதி
  9. National List – 1 பிரதிநிதி
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது தவணைக்  காலத்துக்கான வேட்புமனுதாக்கல்  மார்ச் 15 ஆம் நாளன்று  தொடங்கி எதிர்வரும் ஏப்ரல் 10 ஆம் திகதி நள்ளிரவு வரை  வேட்பு மனுதாக்கல்  ஏற்றுக் கொள்ளப்படும்.

  எதிர்வரும் மே 05, 2024 அன்று பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ளது.

  தேர்தல் நடைமுறை விதிகள், வேட்புமனுக்கள் மற்றும் இதர விடயங்கள்  அமெரிக்க  தேர்தல் ஆணையாளரிடமிருந்து   பெற்றுக் கொள்ளலாம்.

  நன்றி,

  வை. ராஜேஸ்வரன்

தேர்தல் ஆணையாளர் – USA

  மேலதிக விவரங்களுக்கு :

www.tgte-us.org / www.tgte.org