இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகிக்குமாறு பிரித்தானிய இளவரசர்….

 

Edward

இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகிக்குமாறு பிரித்தானிய இளவரசர் எட்வர்ட்டிடம் நாடு கடந்த தமிழீழ அரசினால் கோரிக்கை

இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகிக்குமாறு பிரித்தானிய இளவரசர் எட்வர்ட்டிடம் நாடு கடந்த தமிழீழ அரசினால் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையின் 70ம் சுதந்திர தின நிகழ்வுகளில் பிரதம அதிதியாக பங்கேற்கும் நோக்கில் இளவரசர் எட்வர்ட் இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளார்.

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டுமென இலங்கை மீது, அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டுமென நாடு கடந்த தமிழீழ அரசினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

2009ம் ஆண்டில் ஆறு மாத காலப் பகுதியில் 70,000 தமிழ் மக்களை கொலை செய்த படையினரே, இளவரசர் எட்வர்ட்டிற்கு மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட உள்ளதாகத் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

யுத்தத்தில் கணவரை இழந்த 90, 000 பெண்கள் இலங்கையில் வாழ்ந்து வருகின்றனர் எனவும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளது.

யுத்தக் காலத்தில் இடம்பெற்ற குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டுமென பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் ஐக்கிய நாடுகள் அமைப்பில் இலங்கை தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றிய போதிலும் இதுவரையில் அவை நடைமுறைப்படுத்தப்டவில்லை எனவும் பிரித்தானிய இளவரசரிடத்தில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*