கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழ்உறவுகளின் மருத்துவ தேவைகளுக்கு உதவிடுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
ஈழத்தமிழர்கள், தமிழ்நாட்டு தமிழர்கள் பலரும் மருத்துவ தேவைகளுக்கான நெருக்கடியை மட்டுமல்ல, வாழ்வாதார நெருக்கடியினையும் எதிர்கொண்டு வருகின்றனர்.
தமிழர் தாயகத்தில் இருந்து உதவிகோரல்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது. தமிழ்நாட்டின் நிலைவரங்களுக்கமைய தமிழ்நாட்டு அரசின் சார்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உலகத்தமிழர்களிடம் நன்கொடையினை கோரியிருந்தார்.
இந்நிலையில் தமிழ்உறவுகளின் ‘உயிர்காக்க இன்றே உதவிடுவோம்’ என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளதோடு, இணையவழியூடாக சிறுதுளி பெருவெள்ளமாய் பங்களிப்பினை செய்யும் வகையில் ஏற்பாட்டைச் செய்துள்ளது.
https://www.gofundme.com/f/tgte-covid19-medical-relief-for-tamilsஇந்த இணைப்பின் மூலம் உதவிட முடியும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் பணிமனை தெரிவித்துள்ளது.

