நொவெம்பர் 21ஐ தமிழீழத் தேசியக் கொடி நாளாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பிரகடனம் செய்யவுள்ளது !

Link: https://www.einpresswire.com/article/554268592/21

tgte-logo5“மாவீரர் எழுச்சி வாரத்தின் தொடக்க நாளான நொவெம்பர் 21ம் நாளன்று (1990) தமிழீழத் தேசியக் கொடி தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் ஏற்றிவைக்கபட்டிருந்தது”

மாவீரர் எழுச்சி வாரத்தின் தொடக்க நாளான நொவெம்பர் 21ம் நாளன்று (1990) தமிழீழத் தேசியக் கொடி தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் ஏற்றிவைக்கபட்டிருந்த இந்நாளினை, தமிழீழத் தேசியக் கொடி நாளாக பிரகடனம் ”— நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

NEW YORK, UNITED STATES OF AMERICA, October 20, 2021 /EINPresswire.com/ —

நொவெம்பர் 21ஐ தமிழீழ தேசியக் கொடி நாளாக பிரகடனப்படுத்தும் வகையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை சிறப்பு அமர்வாக கூடவுள்ளது.

விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கென உருவாக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வந்த கொடியில் இருந்த எழுத்துக்கள் நீக்கபட்டு, தமிழீழத்தின் தேசியக்கொடியாக 199ம் ஆண்டு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் அறிவிக்கட்பட்டிருந்தது.

மாவீரர் எழுச்சி வாரத்தின் தொடக்க நாளான நொவெம்பர் 21ம் நாளன்று (1990) தமிழீழத் தேசியக் கொடி தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் ஏற்றிவைக்கபட்டிருந்த இந்நாளினை, தமிழீழத் தேசியக் கொடி நாளாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பிரகடனப்படுத்த இருக்கின்றது.

எதிர்வரும் 24ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இதற்கென கூடவுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சிறப்பு அமர்வின் போது, இது தொடர்பில் விவாதிக்கப்பட்டு பிரகனடத்துக்கான தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளதாக அரசவை தலைவரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தமிழீழ தேசத்தின் இறைமையினையும், தேசியத்தையும் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் வெளிப்படுத்தி நிற்கும் தமிழீழத் தேசியக் கொடி, சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத்தினை உருவாக்குவதில் உள்ள உறுதியினை, உலகிற்கு பறைசாற்றி நிற்கும் ஒன்றாக இருக்கும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

Transnational Government of Tamil Eelam (TGTE) +1-614-202-3377 r.thave@tgte.org