தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும்ஆனந்த விகடனில் வெளிவந்த பிரதமர் வி.உருத்திரகுமாரனது செவ்வியின் முழு வடிவம்

https://www.einpresswire.com/article/585282725/ Screen Shot 2022-08-11 at 1.05.36 AM

“தமிழர்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் கௌரவத்துடனும் வாழ்வதற்கு சுதந்திர தேசமே தீர்வு என்ற கருத்தை உயிர்ப்பிப்பதில் முக்கிய பங்கு எங்களுக்கு இருக்கின்றது”

தமிழீழ விடுதலைப் புலிகளின் தடைக்கெதிராக நாங்கள் இந்திய நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் போது, இந்திய அரசாங்கத்தைச் சேர்ந்த சட்டத்தரணி நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு தடை இல்லை என்று தெரிவித்தார்”— பிரதமர் வி.உருத்திரகுமாரன்CHENNAI, INDIA, August 10, 2022 /EINPresswire.com/ —

27-07-2022 பதிப்பு:

1) சிறிலங்காவின் தற்போதைய மக்கள் தன்னெழுச்சியை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் எப்படி பார்க்கிறது ?

சிங்கள மக்கள் சிங்கக் கொடியின் கீழ் ‘அறகள’ என்ற முழக்கத்துடன் மேற்கொள்ளப்படுகின்ற கிளர்ச்சியை கூர்ந்து கவனித்து வருகின்றோம். ஆட்சியாளர்களின் ஊழல், நிர்வாக சீர்கேடு போன்ற விடயங்களை முதன்மைப்படுத்தி கிளர்ச்சியாளர்கள் போராடுகிறார்கள். தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமை பற்றியோ, இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறல் பற்றியோ கிளர்ச்சியார்கள் எங்கும் பேசவில்லை.

தமிழ்மக்களை அழிப்பதற்கும் ஒடுக்குவதற்கும் அவர்களின் அடையாளத்தை நீக்குவதற்கும் செய்த, செய்துவருகின்ற ராணுவ செலவினம் இந்த பொருளாதார நெருக்கடிக்கு முக்கியதொரு காரணியாகும். போர் முடிந்த பின்னர் கூட இலங்கையின் ராணுவச் செலவு, போர் காலத்தை விட அதிகரித்தே உள்ளது. இலங்கை கடற்படை 38 000 வீரர்களைக் கொண்டுள்ளது. இலங்கையின் சனத்தொகையில் விட 64 மடங்கு அதிக சனத்தொகையைக் கொண்ட இந்தியாவில் 67 228 கடற்படை வீரர்களே உள்ளனர். அமெரிக்காவின் முக்கிய பத்திரிகைகளான நியூ யார்க. டைம்ஸ், வாசிங்ரன் போஸ்ற் ஆகியன இலங்கையின் ஆகியன சுட்டிக்காட்டியுள்ளன. கூடவே சீனாவின் பாரிய கடன் பொறிக்குள் இலங்கை தன்னை அடகு வைத்தமையும் காண்கின்றோம்.

2) கொழும்பை மட்டுமே ஊடகங்கள் பிரதானப்படுகின்றன. வடக்கு கிகை;கின் பாதிப்புக்கள் பெரிதாக பேசப்படவில்லை. அப்பகுதிகளோடு தொடர்பில் இருக்கிறீர்களா ?

தமிழர்கள் தாயகத்தில் ஏற்பட்டுள்ள பாரிய பாதிப்புகள் இருட்டிப்பு செய்யப்பட்டது இது முதல் தடவை அல்ல. 2009ம் ஆண்டு 4 லட்சம் மக்கள் உணவின்றி இருக்க இடமின்றி, மருந்தின்றி, பாதுகாப்பு தேடி தேடி ஓடித்திருந்தமையும் அவ்வேளையில் சர்வதேச ஊடகங்களால் இருட்டடிப்புச் செய்யப்பட்டன. இலங்கை அரசாங்கத்தினால் எமது அரசாங்கம் தடை செய்யப்பட்டுள்ள போதிலும், நாங்கள் மாற்று வழிகளில் எமது தொடர்புகளையும் மக்களுக்கான உதவிகளையும் மேற்கொண்டு வருகிறோம். இலங்கைக்கான எந்தவொரு நாட்டினதும் உதவியும், பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நேரடியாக சென்றடைய வேண்டும் என்பது எமது நிலைப்பாடு. இந்த நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்திய அரசுக்கும், தமிழ்நாட்டு அரசுக்கும் கடிதங்களை அனுப்பியிருந்தோம்.

3) கோத்தபாய மாலத்தீவு வழியாக சிங்கப்பூர் சென்றுள்ளார்.சொல்கிறார்கள். சிங்கப்பூர் மற்றும் உலக நாடுகளிடம் நீங்கள் எதிர்பார்ப்பது என்ன ?

சர்வதேச நாடுகள் ராஜபக்ச சகோதரர்களை இனப்படுகொலை, போர்குற்றங்கள் தொடர்பாக உலகளாவிய நியாயாதிக்கத்தின்படி தங்கள் நீதிமன்றங்களில் நிறுத்த வேண்டும் எனக் கோருகிகன்றோம்.2015ம் ஆண்டில் இருந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையின் ஆணையாளர்கள், இலங்கை தொடர்பான தங்களுடைய தொடர்சியான அறிக்கைகளில் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர். இதனை சிங்கப்பூரிடம் உலகத் தமிழர்கள் எதிர்பார்கின்றனர்.

4) சிறிலங்காவை இந்த நிலைக்கு தள்ளியவர்கள் என்று யாரையெல்லாம் குற்றம் சாட்டுகிறீர்கள் ?

இலங்கைத்தீவு முழுவமே சிங்களவர்களுக்கு என்ற மனோநிலையில் உள்ள சிங்கள பௌத்த பேரினவாதமும், அதன் கட்டியெழுப்பப்பட்ட இராணுவச் செலவினங்களும், கூடவே இராஜபக் தரப்பினரின் ஊழலும், அவர்களது ஆட்சித்திறமையின்மையும் சிறிலங்காவை இந்த நிலைமைக்கு தள்ளியுள்ளன. ராஜபக்சே சகோதரர்களை சிங்கள மக்களே கடுமையாக எதிர்கின்றார்கள். ‘அரசியல் பிழைத்தோர்க்கு, அறம் கூற்றாகும்’ என்ற சிலப்பதிகார வரிகள்தான் ஞாபகத்திற்கு வருகின்றன. ஆனால் சிங்கள மக்கள் இராஜபக்சக்களை எதிர்ப்பதற்கான காரணங்கள் வேறு, தமிழ்மக்கள் எதிர்ப்பதற்கான காரணங்கள் வேறு. ஊழல் குற்றத்தையும், இனபடுகொலை குற்றத்தினை ஓர் தராசில் வைத்து பார்த்துவிட முடியாது. இந்த வேற்றுமையினை சர்வதேச ஊடகங்கள் தெரிந்தோ தெரியாமலோ முக்கியப்படுத்தவில்லை.

5) நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இத்தனை ஆண்டுகளில் சாதித்ததென்ன ?

தமிழர்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் கௌரவத்துடனும் வாழ்வதற்கு சுதந்திர தேசமே தீர்வு என்ற கருத்தை உயிர்ப்பிப்பதில் முக்கிய பங்கு எங்களுக்கு இருக்கின்றது. இலங்கை அரசே அச்சப்படுக்கின்ற தமிழர்களுக்கான ஓர் அரசியல் வடிவமாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இருக்கிறது. அதுமட்டுமல்ல, இனப்படுகொலைக்கு பொறுப்பேற்றக் செய்து இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்ற உலகளாவிய கருத்துருவாக்கத்தினை உருவாக்கியதில் எமக்கு பெரும் பங்குண்டு. பொதுவாக்கெடுப்பு ஒன்று தமிழர்களிடத்தில் நடத்த வேண்டும் நாம், 2012ம் ஆண்டில் இருந்தே வலியுறுத்திவருகின்றோம். இந்நிலைப்பாடும் தற்போது ஒர் உலகளாவிய கருத்தாக பரிணமித்துவருகின்றது.

6) இலங்கையில் தற்போதுள்ள நிலையை தமிழர்கள் எப்படி கையாள வேண்டும் ?

இலங்கையைப் போலவே 1998ம் ஆண்டு இந்தோனேசியாவிலும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இலங்கையின் ஜனாதிபதி பதவி துறந்தது போன்று இந்தோனேசியாவிலும் நிகழ்ந்தது. இன்று சிறிலங்காவில் புதிய ஜனாதிபதி பதவிக்கு வருவது போன்று, இந்தோனேசியாவிலும் புதிய ஜனாதிபதி வந்திருந்தார். அவர் இந்தோனேசியாவில் மறுசீரமைப்பு செய்து நாட்டின் ஓர் அங்கமாக இருந்த கிழக்கு தீமோரின் பொதுவாக்கெடுப்பு ஆதரவு தெரிவித்திருந்தார். அதையே நாமும் வலியுறுத்துகின்றோம். ஆயினும் இலங்கையில் புரையோடிப் போயுள்ள இனநாயகம் இதற்கு சம்மதிக்காது.

சர்வதேசப் பார்வை இலங்கை நோக்கி திரும்பியிருப்பதால் சர்வதேச தளத்தில் பொதுவாக்கெடுப்புக்கான ஆதரவினை திரட்ட இருக்கின்றோம். இனப்படுகொலையாளியும், அமெரிக்காவால் பயணத்தடைக்கு உள்ளாகியிருப்பவருமான சர்வேந்திர டி சில்வா, இப்போது இலங்கை அரசியலில் முக்கிய ஒருவராக காணப்படுகின்றார். இந்த சூழலில் உள்நாட்டுரீதியாக பிரச்சனைகளுக்கு தீர்வுகாண்பதற்கான வாய்ப்போ வெளியோ இல்லை என்பதுதான் கள யாதத்த்தம்.

7) இந்தியாவின் செயல்பாடு, பங்களிப்பு எப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள் ?

தமிழக சட்டசபையில் அனைத்து கட்சிகளாலும் ஏகமனதாக, ‘இலங்கை விவகாரத்தினை சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். அரசியல் தீர்வுக்கு பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும்’ என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் வரும் ஐ.நா மனித உரிமைச்சபையில் இலங்கையை சர்வதே குற்றவியில் நீதிமன்றத்தில் பாரப்படுத்துதவற்கான தீர்மானத்தினை இந்தியா முன்மொழிய வேண்டும். இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் குறிப்பிட்டவாறு, இலங்கைத்தீவில் வட-கிழக்க பகுதி தமிழர்களின் தாயகம் என்பதனை உறுதிப்படுத்தும் செயற்பாடுகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும். அதற்கு முதல்படியாக இராணுவ வெளியேற்றதுக்கான அழுதத்தினை, செயற்பாட்டை இந்தியா முன்னெடுக்க வேண்டும்.

8) அதிபர் தேர்தலில் ரணிலை கோத்தபாய முன்னுறுத்துகின்றார். சஜித், குமார திசநாயகே, பொன்சேகா என பலரும் அப்பதவியை குறிவைக்கின்றார்கள். இலங்கையின் மீட்புக்கு யார் அதிபராக வரவேண்டும் ?

எம்மைப் பொறுத்தவரையில் தமிழ்மக்களுடைய நிலைமைக்கு தனிமனிதர்கள் காரணிகள் அல்ல. மாறாக சிறிலங்காவில் புரையோடிப்போயுள்ள சிங்கள பேரினவாதமே காரணம். அதனால் ஆளை மாற்றுதல், ஆட்சி மாறுதல் தீர்வைத் தரும் என கருதவில்லை. ஐ.நா முன்னாள் பொதுச்செயலர் பான் கி முன் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கையிலும், ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் அறிக்கையிலும் இது அழுத்தமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

9) அண்மையில் சென்னையில் நடந்த உங்கள் கூட்டத்தைத் தடுத்து நிறுத்தி, பங்கேற்றவர்களைக் கைதும் செய்துள்ளதே காவல்துறை ?

தமிழீழ விடுதலைப் புலிகளின் தடைக்கெதிராக நாங்கள் இந்திய நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் போது, இந்திய அரசாங்கத்தைச் சேர்ந்த சட்டத்தரணி ‘நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கோ, அல்லது அரசியல் செயல்பாடுகளுக்கோ எந்தவிதமான தடையும் இல்லை’ என்று நீதிமன்றத்தில் பகிரங்கமாக தெரிவித்திருந்தார். அந்தப் பின்னணியில் இந்தக் கூட்டம் நிறுத்தப்பட்டது, எமக்கு இன்றுவரை பெரும் புதிராகவே உள்ளது.

Transnational Government of Tamil Eelam TGTE r.thave@tgte.org +1 614-202-3377 Visit us on social media: Facebook Twitter Other

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.

*