தமிழீழத் தேசியக்கொடி நாள் நவம்பர் 21 அன்றுஉலகம் முழுவதும் அனுசரிக்கப்பட உள்ளது – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவிப்பு

https://www.einpresswire.com/article/669909573/tamil-eelam-national-flag-is-a-testimony-to-the-sacrifices-of-our-martyrs-rudrakumaran

தேசியக் கொடிநாள் பிரகடனத்தில், தமிழீழத் தேசியக்கொடி, தமிழீழத்தின் இறைமையையும், சுயநிர்ணயஉரிமையையும் குறிக்கின்றது என குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழீழத் தேசியக்கொடி, தமிழீழ தேசம் அந்நிய ஆட்சியிலிருந்தும், சிங்கள பௌத்த மேலாதிக்கத்திலிருந்தும் விடுதலை பெறுவதற்கும் தமிழீழ தேசம் செய்த அளவிட முடியாத உன்னத தியாகத்தை நினைவூட்டுகிறது.”— நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்NEW YORK, UNITED STATES, November 19, 2023 /EINPresswire.com/ — ஏறக்குறைய நான்கரை நூற்றாண்டு காலனியஆட்சியில் தமிழர்களிடம் கொடி இல்லை. 1989 ஆம்ஆண்டு தமிழ்த் தேசியக்கொடியின் முக்கியத்துவத்தைமுதன்முதலில் உணர்ந்த மேதகு வேலுப்பிள்ளைபிரபாகரன் 1990 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம்திகதி தமிழீழத் தேசியக்கொடியை அறிமுகப்படுத்திஏற்றிவைத்தார். WATCH: https://fb.watch/opeNpV9Uqs/?mibextid=qC1gEa

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்றம்அக்டோபர் 24 ஆம் திகதி 2021 ம் ஆண்டு பிரதமர் ருத்திரகுமாரன் தலைமையில் ஏகமனதாக தீர்மானித்து நவம்பர் 21 ஆம் திகதியை தமிழீழத் தேசியக் கொடிநாளாக பிரகடனப்படுத்தியது.

கனடா, பிரான்ஸ், பிரித்தானியா மற்றும், அமெரிக்காஆகிய நாடுகளில் தேசியக்கொடி நாள் நிகழ்வுகள்ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந் நிகழ்வுகளில் பறை முழக்கம் , எழுச்சி நடனம், இசைக்குழு அணிவகுப்பு, தாயகப் பாடல்கள், சிறப்புரைகள் ஆகியன இடம்பெறும்.

அத்துடன்நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தால் இளையசமுதாயத்திற்கு நடாத்தப்படும் கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசும், பங்கேற்றவர்களுக்கான சான்றிதழ்களும்வழங்கப்படும்.

கட்டுரைகளின் தலைப்புக்களாக“தமிழ்த் தேசியத்தின் குறியீடு மேதகு வேலுப்பிள்ளைபிரபாகரன்”, தமிழீழக் கொடிநாள்”, “மாவீரர் நாள்” ஆகியன கொடுக்கப்பட்டன.

சிறீலங்காவின் வாளேந்திய சிங்கத்தை சித்தரிக்கும் கொடியின் வடிவமைப்பில் தமிழர்கள் எவரும்பங்கேற்கவில்லை. சிறீலங்காக் கொடியை தமிழர்கள் எவரும் ஏற்கவும் இல்லை. சிறீலங்காக் கொடி, 1815 ஆம் ஆண்டு கண்டி இராச்சியம் ஆங்கிலேயர்களிடம்வீழ்ச்சி அடைந்ததன் 100 வது ஆண்டான 1915 ஆம்ஆண்டு சிங்களப் புத்திஜீவிகளால் உருவாக்கபட்டது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேசியக்கொடிநாள் பிரகடனத்தில், தமிழீழத் தேசியக்கொடி, தமிழீழத்தின் இறைமையையும், சுயநிர்ணயஉரிமையையும் குறிக்கின்றது எனவும் மற்றும் இக்கொடி உலகம் முழுவதிலும் உள்ள தமிழீழ தேசத்தைச்சேர்ந்த அனைத்து மக்களையும்பிரதிநிதித்துவப்படுத்துகின்றது எனவும்குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இப் பிரகடனத்தில் தமிழீழத் தேசியக்கொடி, தமிழீழ தேசம் அந்நிய ஆட்சியிலிருந்தும், சிங்கள பௌத்த மேலாதிக்கத்திலிருந்தும் விடுதலை பெறுவதற்கும் தமிழீழ தேசம் செய்த அளவிட முடியாத உன்னத தியாகத்தை நினைவூட்டுகிறது எனவும்குறிப்பிடப்பட்டுள்ளது.

கொடி நாள் பிரகடனத்தில் இறுதியாக சுயனிர்ணயஉரிமையின் அடிப்படையிலும், மீண்ட இறைமையின்அடிப்படையிலும், ஈடு செய் நீதியின் அடிப்படையிலும், சமூக நீதி நிலவும் தமிழீழத்தை அமைப்பதற்குஉறுதியுடனும், திடசங்கற்பத்துடனும் உழைப்போம்என உலகிற்கு உரத்த குரலில் எடுத்து சொல்வோம்எனக் குறிக்கின்றது.

WATCH: https://fb.watch/opeNpV9Uqs/?mibextid=qC1gEa

  • நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் (நா.க.த.அ) பற்றி About Transnational Government of Tamil Eelam (TGTE)

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (நா.க.த.அ) என்பது, ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, உலகெங்கிலும் பல நாடுகளில் வாழும் இலங்கைத் தீவைச் சோந்த பத்து இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்களுக்கான அரசாங்கமாகும்.

2009ஆம் ஆண்டு இலங்கை அரசால் பெருமளவில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நா.க.த.அ. உருவாக்கப்பட்டது. 135 அரசவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக உலகெங்கிலும் வாழும் தமிழர்களிடையே, சர்வதேச கண்காணிப்பாளர்களின் மேற்பார்வையில் நா.க.த.அ, மூன்று தடவை தேர்தல்களை நடாத்தியுள்ளது.

இதன் அரசவையானது, மேலவை (செனற் சபை), பிரதிநிதிகள் அவை என இரண்டு அவைகளையும் மற்றும் அமைச்சரவை ஒன்றையும் கொண்டுள்ளது.

தேசியம், தாயகம் மற்றும் சுயநிர்ணயம் ஆகிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு,அமைதியான ஜனநாயக மற்றும் இராஜதந்திர வழிகளில் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுக்கும் பரப்புரையை நா.க.த.அ முன்னெடுத்துள்ளது. மேலும், அதன் அரசியல் நோக்கங்களை,அமைதியான வழிகளில் மட்டுமே அடைய வேண்டும் எனவும் அதன் அரசியலமைப்பு வலியுறுத்துகிறது.

தமிழ் மக்களுக்கு எதிராகப் போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை புரிந்த குற்றவாளிகளைப் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்த வேண்டும் என்று சர்வதேச சமூகத்திடம் கோருவதுடன், தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்க பொது சன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் நா.க.த.அ. வலியுறுத்துகிறது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதமர் திரு.விசுவநாதன் உருத்ரகுமாரன், நியூயோர்க்கைத் தளமாக்க் கொண்ட ஒரு வழக்கறிஞர் ஆவார்.

Follow us on Twitter: @TGTE_PMO Email: pmo@tgte.org Web: www.tgte-us.org Visuvanathan Rudrakumaran Transnational Government of Tamil Eelam (TGTE) +1 614-202-3377 r.thave@tgte.org Visit us on social media: Facebook Twitter Instagram

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*