நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் முறையீட்டைக் கேட்க சுயாதீன ஆணைக்குழு நியமனம்

Link: https://www.einpresswire.com/article/707426932/

LOS ANGELES, CALIFORNIA, USA, April 29, 2024 /EINPresswire.com/ — நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமைத் தேர்தல் ஆணையம் தேர்தல் முறையீட்டைக் கேட்க மூன்று பேர் கொண்ட சுயாதீன ஆணைக்குழு ஒன்றை நியமித்துள்ளது.

இந்த குழுவின் உறுப்பினர்கள் பின்வருமாறு:

  1. திரு அனான் பொன்னம்பலம் (முன்னாள் அமெரிக் தேர்தல் ஆணையாளர்).
  2. Dr அருள் ரஞ்சிதன்.

  3. சத்தியவாணி கோகுலரமணன்

முள்ளிவாய்கால் இனப்படுகொலைக்கு பின்பு தமிழர்களின் குரலை வெளிப்படுத்துவதற்காக 2010 ஆண்டு மே மாதம் 18ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காம் தவணைக்கான பொதுத்தேர்தல் மே 5ம் திகதி உலகளாவிய அளவில் பல்வேறு நாடுகளில் 115 பாராளுமன்ற அங்கத்தவர்களை தெரிவு செய்வதற்கு பொதுத்தேர்தல் நடைபெற இருக்கின்றது.

தமிழீழ மக்களின் நீதிக்கும்இஇறையாண்மைக்குமாக ஜனநாயக வழியில் நேர்கொண்டகொள்கையுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்போராடிவருகின்றது என்பது நீங்கள் அனைவரும் அறிந்ததே.

“புலம் பெயர் தமிழ் மக்களால் சனநாயக முறையில் தமதுஅரசியல் குரலாக தெரிவு செய்யப்பட்டநாடு கடந்த தமிழீழ அரசாங்கமானது. சுதந்திரமும் இறைமையும் கொண்டதமிழீழ அரசை மீளவும் நிறுவப் பாடுபடும்” — என்பதற்கேற்ப சனநாயக ரீதியில் உலகளாவியவிழுமியங்களை கடைப்பிடிக்கும் நோக்கத்தில் ஒவ்வொரு 5வருடங்களுக்கு ஒருமுறை பொதுத் தேர்தல்களைநடத்திவருகிறது.

Contact Anan Ponnampalam Election News email us here

       

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*