சிறிலங்கா அதிபர் மைத்திரியின் ஐ.நா உரைக்கு எதிராக……

 
TGTE Sep21
சிறிலங்கா அதிபர் மைத்திரியின் ஐ.நா உரைக்கு எதிராக அமெரிக்காவில் கவனயீர்ப்பு போராட்டம்: நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

சிறிலங்கா அதிபர் மைத்திரியின் ஐ.நா உரைக்கு எதிராக அமெரிக்காவில் கவனயீர்ப்பு போராட்டம்: நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

“சிறிசேனா தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் கலங்கரைவிளக்கு அல்ல, யுத்தத்தின் பயங்கர இரவின் இருண்ட இறுதி நாட்களில் பாதுகாப்பு அமைச்சராக அவர் செயல்பட்டுவந்தவர்”

UNITED NATIONS, NEW YORK, September 23, 2018 /EINPresswire.com/ —

ஐ.நா. பொதுச்சபையில் உரையாற்ற வரும் சிறிலங்கா அதிபரின் வருகைக்கு எதிர்ப்ப்பு தெரிவிக்கும் பொருட்டு, அமெரிக்காவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

போர்குற்றங்கள் தொடர்பில் சிறிலங்கா அதிபரிடம் கேள்வி எழுப்புமாறு ஐ.நா. பொதுச்சபை உறுப்பினர்களையும் மற்றும் அனைத்துலக ஊடகங்களையும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் வலியுறுத்தியுள்ள நிலையில், இக்கவனயீர்ப்பு போராட்டமும் ஒருங்கு செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் செவ்வாய்கிழமை (செப்-25) மதியம் 12 மணி முதல் 2 மணிவரை நியூ யோர்க்கில் உள்ள ஐ.நா பொதுச்சபைக்கு முன்னால் மைத்திரி திரும்பிப் போ #GoBackMY3# எனும் முழக்கத்துடன் இக்கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற இருக்கின்றது.

அமெரிக்காவின் பல பாகங்களில் இருந்து மட்டுமல்ல, கனடாவில் இருந்தும் இக்கவனயீர்ப்பு போராட்டத்தில் பங்கெடுப்பதற்கான பேருந்து ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது இங்கு குறிப்பிடதக்கது

யார் இந்த மைத்திரி?

இலங்கைத்தீவின் இறுதி யுத்தத்தின் போது, மே-2009ல் பேரின்; இறுதி இரண்டு வாரங்கள் உட்பட ஐந்து முறை பதில் பாதுகாப்பு அமைச்சராக சிறிலங்காவின் அதிபராக சிறிசேன இருந்துள்ளார் என்பதோடு, அவரின் இராணுவக் கட்டளைப் பொறுப்பில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டும் நூற்றுக்கணக்கான தமிழ் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டார்கள்.

மேலும் சிறிலங்கா அரசாங்கம் தமிழ் மக்களுக்கான உணவு மற்றும் மருந்து விநியோகாகத்தை மட்டுப்படுத்தியது. இதன் விளைவாக அப்பாவிப்பொதுமக்கள் பலர் இறந்துள்ளனர்.

போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்கா படையினரது வாக்குறுதிகளை நம்பி தம்மை அவர்களிடம் ஒப்படைத்த பலருக்கு என்ன நடந்தது என்ற கேள்வி 10 ஆண்டுகளை நெருங்கும் நிலையிலும் உள்ளது. அவர்கள் காணாமலாக்கப்பட்டவர்களாவே உள்ளனர்.

அதிபர் சிறிசேன பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தபோதே,சிறிலங்கா அரசாங்கத்தால் ‘தாக்குதல் தவிர்க்கப்பட்ட பிரதேசங்கள் ‘ என நிர்ணயிக்கப்பட்ட சூனியப்பிரதேசங்கள் மீது குண்டு வீச்சை நிறுத்துமாறு பல உலகத் தலைவர்கள் விடுத்த வேண்டுகோளை ,சிறிலங்கா அரசு நிராகரித்தது.

சிறிலங்கா அரசாங்கம் ‘பாதுகாப்பு வலயங்களை’ உருவாக்கி பாதுகாப்பிற்காக அங்கு கூடுமாறு அப்பாவி மக்களை வலியுறுத்தியது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து சேர்ந்தபோது, ,சிறிலங்கா படையினர் குண்டுத் தாக்குதல்களை நடத்தி,பல்லாயிரக்கணக்கான மக்களை படுகொலை செய்துள்ளனர்.

2015ம் ஆண்டில், ஐ.நா. மனிதஉரிமைகள் ஆணையாளர் அவர்கள் நடந்த படுகொலைகளைப் பற்றி ஒரு அறிக்கையை வெளியிட்டு பொறுப்புக் கூறலுக்காக ஒரு கலப்ப்பு நீதிமுறைமையை பரிந்துரைத்தார். இந்த அறிக்கையை வெளியிட்டபின்,சந்தேகத்திற்குரிய போர்க்குற்றவாளி எனக் கூறப்படுவதிலிருந்து தன்னை காப்பாற்றிக் கொண்டு, ‘ஐ.நா. குற்றவாளிகளின் பெயர்களை பிரசுரிப்பதை நாங்கள் நிறுத்திவிட்டோம்.’ என்று அதிபர் சிறிசேனா பெருமிதம் கொண்டுள்ளார். இந்நிலையில் அதிபர் சிறிசேனாவை அனைத்துலக சமூகம் பொறுப்புக்கூற வைக்கவேண்டும்.

“சிறிசேனா தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் கலங்கரைவிளக்கு அல்ல, யுத்தத்தின் பயங்கர இரவின் இருண்ட இறுதி நாட்களில் பாதுகாப்பு அமைச்சராக அவர் செயல்பட்டுவந்தவர்”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*